மேற்கு வங்காள சுற்றுலா பயணி மாயம்

பதிவு செய்த நாள் : 12 அக்டோபர் 2017 07:22


கன்னியாகுமரி:

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மேற்கு வங்காள சுற்றுலா பயணி மாயமானார்.

மேற்கு வங்காளம் மாநிலம் முர்ஷிதாபாத், மேல்பத்தேபூர் பகுதியை சேர்ந்தவர் பிரேந்தரநாத்தாஸ் (72). இவர் தனது மனைவி அஞ்சலிதாஸ் (65). இருவரும் அந்த பகுதியை சேர்ந்த 100 பேர் சேர்ந்து சுற்றுலா புறப்பட்டனர். இந்தியாவின் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு கடந்த 4ம் தேதி இரவு கன்னியாகுமரி வந்துள்ளனர். அன்று இரவு 9 மணியளவில் கோயிலுக்கு சென்றுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அஞ்சலிதாஸ் காணவில்லை. இதனையடுத்து பல இடங்களில் தேடியும் இது வரை அவரை பற்றிய எந்த தகவலும் இல்லாததால் உடன் சுற்றுலா வந்தவர்கள் திரும்பி சென்றனர். இதனையடுத்து பிரேந்தரநாத்தாஸ் மேற்கு வங்காளத்தில் எல்லை பாதுகாப்பு படையில் வீரராக உள்ள தனது மகன் பிபாஸ்குமார்தாஸ் (32) தகவல் கொடுத்தார். இரண்டு பேரும் கன்னியாகுமரியில் கடந்த சில தினங்களாக தேடியும் கிடைக்காததால் கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின்கிரேசியஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.