துாத்துக்குடி ரேஷன் பச்சரிவு மாவு விவகாரம்: ரைஸ் மில் குத்தகைதாரரிடம் கிடுக்கிப்பிடி விசாரண

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2017 07:45

துாத்துக்குடி:

ரேஷன் பச்சரிசி மாவு விவகாரத்தில் எந்த நிறுவனமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துாத்துக்குடி கலெக்டர்கள் வெங்கடேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துாத்துக்குடி சத்யா தியேட்டர் அருகே உள்ள ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி மூலம் மூடை, மூடையாக பச்சரிசி மாவு அரைத்து கடத்தப்படுவதாக பறக்கும்படை தாசில்தார் சந்திரனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து தாசில்தார் சந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர் வடிவேல்குமார் குறிப்பிட்ட ரைஸ் மில்லுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

மூடை, மூடையாக அங்கு பச்சரிசி மாவு மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே அரைப்பதற்கு தயாராக மூடைகள் இருந்தன. அதனை அதிகாரிகள் சோதனை செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரைஸ் மில்லில் உள்ளவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினர்.

இதற்கிடையில் ரைஸ் மில்லில் துாத்துக்குடியில் இயங்கி வரும் பிபரல சூப்பர் மார்க்கெட்  உள்ள பெயர் பிரின்ட் செய்யப்பட்ட கவர் இருந்தது. இதனை தொடர்ந்து இந்த தகவல் சமூக வலை தளங்களில் பரவியது. அதிகாரிகள் தரப்பில் இது குறித்து தகவல் தெரிவிக்க தயக்கம் காட்டி விட்டதாக கூறப்படுகிறது. ரைஸ் மில்லில இருந்து ௮௦௦ கிலோ பச்சரிசி மாவு, 200 கிலோ பச்சரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ரேஷன் பச்சரிவு மாவு விவகாரம் குறித்து கலெக்டர் வெங்கடேசிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

கலெக்டர் வெங்கடேஷ் கூறுகையில், ‘‘ரேஷன் பச்சரிசி மாவு முறைகேட்டில் எந்த நிறுவனமாக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ரைஸ் மில்லை குத்தைக்கு எடுத்து நடத்தி வரும்  செல்வராஜ்(49) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் பச்சரி மாவினை பிரபல சூப்பர் மார்க்கெட்டிற்கு விற்பனை செய்ய இருந்ததாக தெரிவித்தார். இதுதொடர்பாக குடிமைபொருள் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.