பாரத யாத்திரையில் சைலாஸ் சத்தியார்த்தி - நாகர்கோவில் மாணவர்கள் சந்திப்பு

பதிவு செய்த நாள் : 13 செப்டம்பர் 2017 04:02

நாகர்கோவில்,

நோபல் பரிசு பெற்ற சைலாஷ் சத்தியார்த்தி நாகர்கோவிலில் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

"குழந்தைகளைக் காப்போம் இந்தியாவைக் காப்போம்” என்ற கோஷத்துடன் ‘பாரத யாத்திரையை’ கன்னியாகுமரியிலிருந்து துவங்கியுள்ள நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி மாணவர்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி பயோனியர் குமாரசுவாமிக் கல்லூரியில் நடந்தது. கல்லூரித்தலைவர் குமாரசுவாமி தலைமை வகித்தார்.  கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் லதாகுமாரசுவாமி வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் தெய்வ பிரகாஷ்  அறிமுகவுரை பேசினார்.  சைலாஷ் சத்தியார்த்தி பேசுகையில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.  குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதையும் குழந்தைகள் கடத்தலையும் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரதயாத்திரையைத் துவங்கியுள்ளேன். 1893 செப்டம்பர் 11ம் நாள் சிக்காக்கோ மதப்பாராளுமன்றத்தில் விவகோனாந்தர் உரையாற்றிய நிகழ்ச்சியினை நினைவுப்படுத்தவே இந்த நாளில் தனது யாத்திரையை துவங்கியுள்ளேன். இளைஞர்கள் கையில்தான் இந்தியாவின் எதிர்காலம் உள்ளது. மாணவ மாணவியர் இந்தியாவை முன்னேற்றும் புனிதப்பணியில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர்  கைலாஷ் சத்தியார்த்தி தலைமையில் “குழந்தைகளைக் காப்போம் இந்தியாவைக் காப்போம்” என்ற உறுதிமொழியையும் மாணவமாணவியர் ஏற்றுக்கொண்டனர். வருண்குமாரசுவாமி, நாகலிங்கம்பிள்ளை, கல்லூரி முதல்வர் துரைராஜ் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.