வேனில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் பலி

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 08:01

நாசரேத்:

வேனில் இருந்து தவறி விழுந்த 4 ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.

துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மாதா வனத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் வெளிநாட்டில் வேலைசெய்து வருகிறார். இவரது மனைவி அகிதா. இவர்களுக்கு ஜெஸ்வின் மற்றும் மேத்யூ என இரு மகன்கள். அகிதா நாசரேத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் ஜெஸ்வின் மற்றும் மேத்யூ படித்து வருகிறார்கள். இதில் ஜெஸ்வின் (9) 4–ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஜெஸ்வினும், மேத்யூவும் வேனில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஏதிர்பாரத விதமாக ஜெஸ்வின் வேனில் தவறி கீழே விழுந்தார்..உடனே பொதுமக்கள் அவனை ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். ஆனால் மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணியஸ் ஜேசுபாதம் உடலை கைப்பற்றி பரிசோதனை க்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.