பஸ்சில் திருட முயன்­ற இரு பெண்கள் கைது

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 07:56

திரு­நெல்­வேலி:

பாளை., யில்­ ஓடும் பஸ்சில் திருட முயன்றதாக இரு பெண்கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

வண்­ணார்­பேட்­டையில் இருந்து பாளை., பஸ்ஸ்டாண்ட் நோக்கி நேற்று சென்ற பஸ்சில் கூட்ட நெரி­சலைப் பயன்­ப­டுத்தி ஒரு பெண்­ணிடம் இருந்த பணப்­பையை இரு­ பெண்கள் திருட முயன்­றனர். பணப்­பையை வைத்­தி­ருந்த பெண் சுதா­ரித்து சத்தம் போட்டார். இரு பெண்­களும் பஸ்சில் இருந்து இறங்கி தப்ப முயன்­றனர். அக்­கம்­பக்­கத்­தினர் திரண்டு இரு­வ­ரையும் பிடித்து பாளை., குற்­றப்­பி­ரிவு போலீசில் ஒப்­ப­டைத்­தனர். அவர்­க­ளிடம் போலீசார் விசா­ரணை நடத்­தி­னர்.

விசா­ர­ணையில், அவர்கள் சேரன்­ம­கா­­தே­வியைச் சேர்ந்த பாப்­பா(23), செல்வி(30) என தெரி­ய­வந்­தது. இரு­வரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.