குடி­ய­ரசு தின­ப்­போட்­டி பாளை., மாணவர் தகு­தி

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 07:56

திரு­நெல்­வேலி:

பாளை., சேவியர் பள்ளி மாணவர் குடி­ய­ரசு தின விளை­யாட்டுப் போட்­டிக்கு தகுதி பெற்­றுள்­ளார்.

வள்­ளியூரில் நடந்த மண்­டல அள­வி­லான மிக மூத்தோர் தட­களப் போட்­டியில் 200 மீட்டர் ஓட்­டப்­போட்­டியில் பாளை., சேவியர் பள்ளி மாணவர் ஜஸ்டின் பிர­பாகர் பங்­கேற்றார். இவர் இலக்கை 23.53 வினா­டி­களில் கடந்து சாதனை படைத்து திருச்­சியில் அடுத்த மாதம் நடக்கும் குடி­ய­ரசு தின விளை­யாட்­டுப்போட்­டிக்­கு தகுதி பெற்றார்.

மாணவர் ஜஸ்டின் பிர­பா­க­ருக்கும், பயிற்சி அளித்த உடற்­கல்வி ஆசி­ரியர் சார்­ல­சுக்கும் பள்ளி தாளாளர் பிரான்சிஸ் சேவியர், தலை­மை­யா­சி­ரியர் வில்சன், உதவித் தலை­மை­யா­சி­ரியர் ஜான் கென்­னடி பாராட்டு தெரி­வித்­த­னர்.