யெகோவாவின் மண்டல மாநாடு

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 07:37

நாகர்கோவில்:

யொகோவாவின் மண்டல மாநாடு வரும் 15ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடக்கிறது.

நாகர்கோவில் வடசேரியில் காலை 9 .20 மணி முதல் மாலை 4.50 மணிவரை நடைபெறும் மாநாட்டில்  இசை வீடியோ, பாட்டு, தொடர் பேச்சு, ஆடியோ நாடகம் மற்றும் நாடகம் நடக்கிறது. மாநாட்டிற்கான அனுமதி இலவசம். அனைத்து வயதினரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இறுதி நாளான 17ம் தேதி மாலை 3.30 மணிக்கு முடிவடையும். மாநாட்டில் ஒழுக்கம், அறிவு, சுயகட்டுப்பாடு, மற்றும் சகிப்புதன்மைக்கு உதவும் குணங்களை வளர்த்து கொள்வது குறித்து விளக்கப்படும். மாநாட்டில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரம் பிரதிநிதிகளுக்கு மேல் கலந்து கொள்கின்றனர். இம்மாநாடு நடப்பு ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை இந்தியா முழுவதும் அந்தந்த மாநில மொழிகளில்  நடக்கிறது.