சுகாதார துணை இயக்குனர் வீட்டில் கார் திருட முயற்சி:வாலிபர் கைது

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2017 07:37

நாகர்கோவில்:

குமரி மாவட்ட சுகாதார துணை இயக்குனர் வீட்டில் கார் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :

நாகர்கோவில் நேசமணி நகர் ஆசாரிபள்ளம் ரோட்டைச் சேர்ந்தவர் மதுசூதனன். குமரி மாவட்ட சுகாதார துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்திரா (49). டாக்டர் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று பிற்பகல் இந்திரா தனது காரை வீட்டின் முன்புறம் நிறுத்தி விட்டு வீட்டினுள் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பிவரும் போது தனது காரை யாரோ திருட முயற்சிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சப்தம் போடவே உஷாரான திருடன் இந்திராவை தகாதவார்த்தைகள் பேசி காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து  கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளான். அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் அவனைப் பிடித்து நேசமணிநகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் நாகர்கோவில் மேலராமன்புதூரைச் சேர்ந்த புஷ்பராஜ் மகன் பிரபு ('27) எனவும் தற்பொழுது வெள்ளிச்சந்தை அருகே காட்டுவிளையில் வசித்து வருவதாகவும் தெரிகிறது.  போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே பிரபு மீது வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.