கர்ப்பிணியை அலைக்கழித்த அரசு டாக்டர்கள்: வயிற்றிலேயே குழந்தை இறந்து போன பரிதாபம்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:02


சங்­க­ரன்­கோ­வில்:

சங்­க­ரன்­கோ­வில் அரசு ஆஸ்பத்திரியில் அமைச்­சர் ராஜ­லட்­சுமி மற்­றும் கலெக்­டர் சந்­திப்­நந்­தூரி ஆகி­யோர்  நேற்று ஆய்வு நடத்­தி­னர். உள்­நோ­யா­ளி­கள் சிகிச்சை பெறும் வார்­டு­கள் மற்­றும் தற்­போது டெங்­கு­காய்ச்­சல் பர­வி­வ­ரும் நிலை­யில் காய்ச்­சல் தொடர்­பாக வழங்­கப்­ப­டும் சிகிச்சைகள் குறித்து கேட்­ட­த­றிந்­த­னர்.

ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்­ய­வந்த அமைச்­சர் மற்­றும் கலெக்­டரை முற்­று­கை­யிட்டு சிகிச்சை அளிக்க மறுத்­த­தால் தனது வயிற்­றில் இருந்த குழந்தை இறந்­த­தாக இளம் பெண் கண்­ணீர் மல்க கூறினார்

சங்­க­ரன்­கோ­வில் சங்­கு­பு­ரம் 3ம் தெருவை சேர்ந்த காமாட்சி ,உமா­தேவி தம்­ப­தி­யி­ன­ரின் மகள் ராம­லட்­சுமி (24) இவர் தற்­போது தனது இரண்­டா­வது பிர­ச­வத்­திற்­காக தாய் வீட்­டில் தங்கி  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்­துள்­ளார். அவ­ருக்கு 11ம் தேதி குழந்தை பிறக்­கும் என டாக்டர்கள் கூறிய நிலை­யில் கடந்த ஜுலை­மா­தம் 26ம் தேதி காலை 8.மணிக்கு வலி ஏற்­பட்­ட­தால் ஆஸ்பத்திரிக்கு வந்து ஸ்கேன் எடுத்து பார்த்து நாளை அறு­வை­சி­கிச்சை செய்து கொள்ள வலி­யு­றுத்­தி­ய­தால் ஊசி போட்­டு­விட்டு வீடு திரும்பி உள்­ள­னர். மீண்­டும் பகல் 2.00 மணிக்கு மேல் மீண்­டும் வலி ஏற்­பட்­ட­தால் ஆஸ்பத்திரிக்கு வந்­த­போது பணி­யில் இருந்­த­வர்­கள் சிகிச்சை நாளை என்­ப­தால் தற்­போது அனு­ம­திக்­க­மு­டி­யாது என கூறி திரும்பி அனுப்­பி­யுள்­ள­னர். சிகிச்சைக்கு அனு­ம­திக்­கா­த­தால் வீடு திரும்­பிய ராம­லட்­சுமி  மீண்­டும் அன்று இரவு 11.30 மணிக்கு வலி அதி­க­மா­ன­தால் மீண்­டும் வந்­த­போது டாக்டர்கள் பரி­சோ­தித்­த­தில் வயிற்­றில் இருந்த குழந்தை இறந்து விட்­ட­தாக கூறி அறு­வை­சி­கிச்சை செய்து குழந்­தையை எடுக்க பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்­பி­வைத்­த­னர். மதி­யம் வலி வந்­த­போது ஆஸ்பத்திரியில் அனு­ம­திக்­க­ப­டா­த­தால் தனது குழந்தை இறந்து விட்­ட­தாக ராம­லட்­சுமி மற்­றும் அவ­ரது பெற்­றோர் அமைச்­சர் மற்­றும் கலெக்­ட­ரி­டம்  கண்­ணீர் மல்க முறை­யிட்­ட­னர். இதை­கேட்டு கொண்ட அமைச்­சர் மற்­றும் கலெக்­டர் இது குறித்து உரிய விசா­ரணை நடத்தி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என கூறி­னர்.