வண்ணார்பேட்டையில் ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த ‘ஆஸ்பெடாஸ் சீட்’ அகற்றம்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:00


திருநெல்வேலி:

வண்ணார்பேட்டையில் கோயில் அருகே ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த ‘ஆஸ்பெடாஸ்’ சீட்டை அதிகாரிகள் அகற்றினர்.

வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் தங்க ஈஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கொடை விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கோயில் வளாகச்சுவரை ஒட்டியுள்ள ரோட்டில் தனிநபர் ஒருவர் ‘ஆஸ்பெடாஸ் சீட்’ அமைந்திருந்தார். இதற்கு கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு பாளை.தாசில்தார் தங்கராஜ் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் கோயில் வளாக சுவரையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெடாஸ் சீட்டை அகற்ற முயன்றனர். அதற்கு அதன் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  இதைத்தொடர்ந்து ஆக்ரமித்து வைத்திருந்த ஆஸ்பெடாஸ்சீட் அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.