ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம்: நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 07:58

திருநெல்வேலி:

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நலச்சங்கத்தின் மாவட்ட கூட்டம் பாளை.யூனியன் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட துணை அமைப்பாளர் முருகன் தலைமை வகித்தார். ரத்தினம், நாகம்மாள், புஷ்பம், உலகம்மாள் முன்னிலை வகித்தனர். துணை அமைப்பாளர் சந்திர சேகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாநில அமைப்பாளர் ஆறுமுகம் பேசினார்.

கூட்டத்தில் பாக்கிய லட்சுமி, பிச்சம்மாள், அழகமண்மாள், கோகிலம், முத்தம்மாள், செல்வி, சவுந்தரி, மாரியம்மாள், ருக்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட அமைப்பாளர் பால்ராஜ் நன்றி கூறினார்.

ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் இணைந்து நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர் நலச்சங்கம் ஆதரவு தெரிவிப்பது, ஊதிய கமிஷனை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு 9 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

20 மற்றும் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டிய தேக்கநிலை ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.