பாளை.யில் குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் கைது

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 07:57

திருநெல்வேலி:

பாளை.,யில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாளை.,ரெட்டியார்பட்டி முப்பிடாதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற அய்யப்பன் (22). இவர்மீது பெருமாள்புரம் போலீஸ் ஸ்டேஷனில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே இவரை குண்டர்சட்டத்தில் கைது செய்ய பெருமாள்புரம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், உதவி கமிஷனர் விபஜயகுமார், துணை கமிஷனர் சுகுணா சிங் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் கபில்குமார் சரத்கரிடம் பரிந்துரை செய்தனர்.

இவர்களது பரிந்துரையின்படி, மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை.மத்திய சிறையில் அடைத்தனர்.