பாளை.ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் வளாகத்தில் முதியவர் உடல் மீட்பு

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 07:57

திருநெல்வேலி,:

பாளை.,ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி வளாகத்தில் இறந்து போன அடையாளம் தெரியாத முதியவர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளை.,ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி வளாகத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியா அல்லது நோயாளியை பார்க்க வந்த உறவினரா என்ற விபரமும் தெரியவில்லை. இதுகுறித்து பாளை.ஐகிரவுண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.