நான்குவழி சாலையை இணைக்கும் பாலத்திற்கான கார்டர் அமைக்கும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 07:48


கன்னியாகுமரி:

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான நான்குவழிசாலை இணைப்பு பாலத்திற்கான ராட்சத கார்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

             நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் வகையில் நான்குவழிசாலை  திட்டம்  பாஜக ஆட்சிகாலத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி அப்போதைய பிரதமர் வாய்பாய், முதல்வர் ஜெ., ஆகியோரால் கன்னியாகுமரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் மகாதானபுரத்தில் உள்ள நரிகுளத்தின் குறுக்கே  சாலை பணிகள்  கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவடையாமல் இருந்தது. இந்நிலையில்  மத்திய அரசு 21கோடிரூபாய் நிதிஒதுக்கீடு செய்ததைதொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 13-ம் தேதி இப்பணியினை மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, பொன் ராதாகிருஷ்னன் ஆகியோர் அடிக்கல்  நாட்டினர்.  500 மீட்டர் நீளமுள்ள இப்பாலதிட்டம்  21 கோடி ரூபாய் செலவில் 102 மீட்டர் நீளத்தில் ஒரு உயர்மட்ட பாலம், தலா 10 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு சிறு பாலங்கள் 1500 மீட்டர் நீளத்தில் நடைபாதை ஆகியவை அமைக்கப்படவுள்ளது.

       இது குறித்து இப்பால பணியில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது;- இந்த பாலத்திற்காக 5 ராட்சத பில்லர்கள் அமைக்கப்பட்டு அதற்குமேல் 4 சிலாப் அமைக்கப்படவுள்ளது.8 கோடிரூபாயில் பெரிய பிரிட்ஜ் பணியும், சிறிய பிரிட்ஜ்க்கு 6 கோடிரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பில்லர் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. பில்லருக்கு மேல் ஒரு மீட்டர் உயரத்தில் காங்கரீட் போடப்பட்டு அதற்கு மேல் கார்டர் பொருத்தப்படும். அதற்கு மேல்   சாலைக்கான ஒரு மீட்டர் உயரத்தில் காங்கரீட் போடப்படும். தற்போது பிரிஜ்ட்க்கு மேல் பாலத்தின் பக்கவாட்டுச்சுவர் அமைப்பதற்கு 48 கார்டர் பொருத்தப்படவுள்ளது. தற்போது 35-க்கும் மேற்பட்ட கார்டர் அமைக்கப்பட்டுள்ளது.18 மீட்டர் நீளம் கொண்ட ஒவ்வொரு கார்டரும் 40 டன் எடை கொண்டது. இந்த கார்டர் அமைக்கும் பணி முடிந்ததும் 28 நாட்கள் கார்டர் காங்கீரிட் செட் ஆன பின்னர் அதிநவீன கிரேன் கொண்டு வரப்பட்டு கார்டரை துக்கி பாலத்தில் பக்கவாட்டு சுவருக்காக பொருத்தப்படும்.  இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  திறந்து விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.