குடோனில் பதுக்கிய ரூ.1கோடி செம்மரக்கட்டை பறிமுதல்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 09:04

துாத்துக்குடி,:

துாத்துக்குடியில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.1கோடி செம்மரக்கட்டை மற்றும் 10 மூடை பீடி இலையை பறிமுதல் செய்து சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

துாத்துக்குடி சுங்கத்துறை சிறப்பு நுண்ணறிவு மற்றும் விசாரணை பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் புதுக்கோட்டை அருகே தம்பிக்கை மீண்டான் பகுதியில் உள்ள குடோனில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் காலி மண்ணெண்ணெய் பேரல்களுக்கு இடையே சுமார் ௩.௫டன் எடையுள்ள செம்மரக்கட்டை மற்றும் 10 மூடை பீடி இலை பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

  சூப்பிரெண்ட் செந்தில்நாதன் தகவலின் பேரில் ஆய்வு மேற்கொண்ட துணை கமிஷனர் ரங்கசாமி தலைமையிலான குழுவுக்கு கஸ்டம்ஸ் கமிஷனர் திவாகர் மற்றும் கூடுதல் கமிஷனர் சுரேஷ் பொட்டுலு ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இங்கிருந்து கடல் வழியே இலங்கைக்கு கடத்தி பின்னர் அங்கிருந்து மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கஞ்சாவை கடத்த திட்டமிட்டுள்ளனர். குடோன் உரிமையாளரான லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகின்றது.