நடிக்­கா­தது வருத்­தம்! – -ராய் லட்­சுமி

13 மார்ச் 2018, 03:16 PM

ஸ்ரீகாந்த்­து­டன் 'சவு­கார்பேட்டை' பேய் படத்­தில் நடித்­துக் கொண்­டி­ருந்த ராய் லட்­சு­மியை சந்­தித்­த­போது....

 * லட்­சுமி ராய், ராய் லட்­சு­மி­யாக மாறக் கார­ணம் என்ன?

பெயர் மாற்­றம் இல்லை. எனது உண்­மை­யான பெயர், ராய் லட்­சுமி. பெரும்­பா­லா­ன­வர்­கள் நினைப்­ப­து­போல ‘ராய்’ என்­பது எனது சாதிப்­பெ­யர் அல்ல. எனது பெயரே ‘ராய்’­­­தான். லட்­சுமி என்­பது எங்­கள் குடும்­பப் பெயர். ஆகவே, ராய் லட்­சுமி என எழு­து­வ­து­தான் முறை. அப்­ப­டியே எழு­தும்­படி மீடி­யாக்­க­ளி­டம் கேட்­டேன். கடை­சி­யில் நான் பெய­ரையே மாற்றி விட்­டேன் என்­கிற அள­வுக்கு வந்­து­விட்­டது.

  * தற்­போது நடித்­துக் கொண்­டி­ருக்­கும் 'சவு­கார்­பேட்டை' படம் பற்றி?

 ‘சவு­கார்­பேட்டை’ என்ற பேய் படத்­தில் இப்­போது நடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி­க­ளில் இந்த படம் வெளி­யா­கி­றது. இதில் கிரா­மத்து பெண் வேடம். ஆனா­லும் வெவ்­வேறு பரி­மா­ணங்­க­ளில் வரு­கி­றேன். அதில் ஒன்று பேய் வேடம். இந்த படம் எனக்கு பெரிய சவா­லாக அமைந்­தது. கஷ்­டப்­பட்டு நடித்­தேன்.

* பேய் இருக்­கி­றது என்று நம்­பு­கி­றீர்­களா?

பேய் படங்­க­ளில் நடித்­தா­லும், எனக்கு பேய் நம்­பிக்கை கிடை­யாது. கட­வுளை மட்­டுமே நம்­பு­கி­றேன். ஆனா­லும் சில அமா­னுஷ்ய சம்­ப­வங்­களை கண்டு நான் பயந்து இருக்­கி­றேன். ‘அரண்­மனை’ படத்­தில் நடித்­த­போது என்னை சுற்றி ஏதோ சில அதிர்­வு­கள் தென்­ப­டு­வ­தாக உணர்ந்­தேன்.

சமீ­பத்­தில் சென்­னை­யில் உள்ள ஒரு நட்­சத்­திர ஓட்­ட­லில் பத்­தா­வது மாடி­யில் தங்கி இருந்­தேன். இரவு நேரத்­தில் ஜன்­ன­லுக்கு வெளியே 'பளிச் பளிச்' என வெளிச்­சம் தெரிந்­தது. அப்­போது மழை இல்லை. மின்­கோ­ளா­றும் ஏற்­ப­ட­வில்லை. அதோடு ஜன்­ன­லில் ஓங்கி அடிக்­கும் சத்­த­மும் கேட்­டது. பேய் படங்­க­ளில் நடிப்­ப­தால் ஏற்­பட்ட பீதி­யாக இருக்­க­லாம் என்று நினைத்­தேன். ஆனால் சத்­தம் தொடர்ந்­தது. வெளிச்­ச­மும் வந்து கொண்டே இருந்­தது. இத­னால் ரொம்ப பயந்து போனேன்.

 * தமிழை விட மலை­யா­ளத்­தில் அதிக கவ­னம் செலுத்­து­கி­றீர்­களே?

மலை­யா­ளத்­தில் எனக்கு சரி­யான வாய்ப்­பு­கள் வரு­கின்­றன. மலை­யாள சூப்­பர் ஸ்டார்­க­ளான மோகன்­லா­லு­டன் நான்கு படங்­க­ளி­லும், மம்­மூட்­டி­யு­டன் மூன்று படங்­க­ளி­லும் நடித்­துள்­ளேன். அங்­கி­ருந்து வரும் வாய்ப்­பு­கள் எல்­லாமே பெரிய வாய்ப்­பு­க­ளாக அமை­கின்­றன. தமிழ், தெலுங்கு, கன்­ன­டம், மலை­யா­ளம் என நான்கு தென்­னிந்­திய மொழி­க­ளி­லும் மாறி மாறி நடித்து வரு­கி­றேன். மலை­யா­ளத்­தில் பெரிய நாய­கர்­க­ளு­டன் நடிப்­ப­தால் அதிக கவ­னம் பெறு­கி­றது.

 * மோகன்­லா­லு­ட­னும், மம்­மூட்­டி­யு­ட­னும் நடித்த அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்து கொள்ள முடி­யுமா?

 முத­லில் சிறு நடுக்­கத்­து­டன்­தான் அவர்­க­ளு­டன் நடித்­தேன். இன்று எனது நடிப்பு ஓர­ள­வுக்கு மேம்­பட்­டி­ருக்­கி­றது என்­றால், அவர்­கள் இரு­வ­ரு­ட­னும் நடித்­த­து­தான் கார­ணம்.

 * ‘நான்கு மொழி நடிகை’ என்ற முறை­யில் சொல்­லுங்­கள், எந்த மொழி சினிமா இப்­போது சரி­யான பாதை­யில் செல்­கி­றது?

தமிழ் சினி­மா­தான். மலை­யா­ளத்­தில் பல புதிய முயற்­சி­கள் உரு­வாக்­கப்­பட்­டா­லும் தமிழ் சினி­மா­தான் த பெஸ்ட். தெலுங்­கானா பிரச்­னை­யால் தெலுங்கு திரை உல­கம் கடந்த இரு வரு­டங்­க­ளாக சரி­யாக இயங்­க­வில்லை. கன்­னட திரை­யு­ல­கம் போக வேண்­டிய தூரம் இன்­னும் அதி­கம் இருக்­கி­றது என நினைக்­கி­றேன்.

 * தமி­ழில் நீங்­கள் அஜீத் தவிர வேறு பெரிய நாய­கர்­க­ளு­டன் நடிக்­க­வில்­லையே?

 விஜய்­யு­டன் ஒரு படத்­தில் நடிக்­கும் வாய்ப்பு கிடைத்த போதும், சில கார­ணங்­க­ளால் நடிக்க முடி­ய­வில்லை. நான் வாழ்­வில் அதி­கம் மிஸ் பண்­ணி­யது அந்த படத்­தைத்­தான்.