யுனி­வர்­சல் தலைப்பு! –- நிதின் சத்யா

13 மார்ச் 2018, 02:58 PM

“நடி­க­ராக இருக்­கிற நான் அடுத்த லெவலுக்கு போக­ணும் என்ற முயற்­சி­யில்­தான் ‘ஜரு­கண்டி’ படத்­தின் மூலம் தயா­ரிப்­பா­ளர் அவ­தா­ரம் எடுத்­துள்­ளேன். அது­மட்­டு­மல்ல, எனது தொழில் சினிமா. என் மன­துக்கு நெருக்­க­மான சினி­மா­வைத் தாண்டி வேறொரு துறையை என்­னால் யோசித்­துக் கூட பார்க்க முடி­யாது.

 வஸந்த் சார், வெங்­கட் பிரபு போன்ற ஜாம்­ப­வான்­க­ளு­டன் கூடவே இருந்­த­தால் தைரி­ய­மாக படம் தயா­ரிக்­க­லாம் என்ற முடி­வில் படத்­த­யா­ரிப்­பில் இறங்­கி­னேன்’’ என்று ‘ஜரு­கண்டி’ படத்­தின் மூலம் தயா­ரிப்­பா­ள­ராக மாறி­ய­தற்­கான இன்ட்­ரோ­வு­டன் ஆரம்­பித்­தார் நிதின் சத்யா.

* தெலுங்கு தலைப்பு ஏன்?

இந்­தி­யா­வில் எங்கே போய் கேட்­டா­லும் ‘ஜரு­கண்­டி’க்கு அர்த்­தம் தெரி­யும். ஈசியா எல்­லா­ரும் திருப்­ப­தி­யோட கனெக்ட் ஆவாங்க. ‘மாஸ்’ படத்­துக்கு மாஸா ஒரு டைட்­டில் வையுங்­கள் என்று சொன்­ன­போது ‘மாஸ்’ என்று டைட்­டில் வைத்­தார் வெங்­கட் பிரபு.

அதே மாதிரி வெங்­கட் பிர­பு­வி­டம் இந்­தக் கதையை சொல்­லும்­போது இது ஓட்­டப் பந்­த­யம் மாதிரி விறு­வி­றுன்னு வேக­மாக நகர்­கிற கதைக்­க­ளம் என்­ற­தும் ‘ஜரு­கண்டி’ என்று வைத்­துக் கொள்­ளுங்­கள் என்­றார். நாங்­க­ளும்  யுனி­வர்­சலா ஒரு வார்த்தை தேடிக்­கிட்டு இருந்­த­போது ‘ஜரு­கண்டி’ என்ற டைட்­டில் பொருத்­த­மாக இருந்­தது.

* கதை?

ஆக்­க்ஷன் கலந்த காமெடி படம். ஹீரோ, ஹீரோ­யின் இரு­வ­ருமே வாழ்க்­கை­யில் ஜெயிக்க வேண்­டும் என்று லட்­சி­யத்­தோடு வாழ்­கி­றார்­கள். அந்த சம­யத்­தில் அவர்­கள் லட்­சி­யத்­துக்கு முட்­டுக்­கட்டை போடு­கிற மாதிரி ஒரு திரு­ட­னி­டம் மாட்­டிக் கொள்­கி­றார்­கள். அதி­லி­ருந்து அவர்­கள் எப்­படி தப்­பிக்­கி­றார்­கள், அவர்­க­ளுக்­குள் இருக்­கும் கெமிஸ்ட்ரி எப்­படி காத­லாக மலர்­கி­றது என்­பதை ஜாலி­யாக சொல்­லி­யுள்­ளோம்.

* ஹீரோ­யின் சூப்­பரா இருக்­காங்­களே?

ரெபா மோனிகா ஜான். பெங்­க­ளூ­ரு­வில் செட்­டி­லான மலை­யாள பொண்ணு. ‘ஜேக்­கப் என்­கிற சொர்க்க ராஜ்­ஜி­யம்’ என்ற மலை­யாள படத்­தில் நடித்­தி­ருக்­கி­றார். தமி­ழில் இது­தான் முதல் படம். ஜாலியா இருக்­கிற பொண்­ணுக்கு சோகம் வந்தா, ரீயாக்­க்ஷன் எப்­படி இருக்­கும் என்­ப­தைக் காண்­பிக்க பொருத்­தமா ஒரு ஹீரோ­யின் தேடிக்­கிட்டு இருந்­த­போ­து­தான் ரெபா கிடைத்­தார். ஆண்ட்­ரியா, அஞ்­சலி மாதிரி இல்­லேன்­னா­லும் புது­வி­த­மாக இருப்­பார். தீபிகா படு­கோன் லெவ­லுக்கு போகக்­கூ­டிய அள­வுக்கு சகல திற­மை­க­ளும் உள்­ள­வர்.

* நடிப்பு, தயா­ரிப்பு –- எது கஷ்­டம்?

இரண்­டி­லுமே மகிழ்ச்­சி­யா­கத்­தான் இருக்­கேன். தயா­ரிப்­பா­ளரா ஒரு இரு­நூறு தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­ப­ளம் கொடுக்க முடிஞ்­ச­துங்­கி­றது கூடு­தல் மகிழ்ச்சி. நான் குறை­வாத்­தான் கொடுத்­தேன். ஆனா, பாக்கி வைக்­காம முழுசா கொடுத்­தேன்னு எல்­லா­ரும் சொல்­றதை கேட்­கி­ற­போது திருப்­தியா இருக்கு. மத்­த­படி தயா­ரிப்­பா­ளர்ன்னு ஸ்பாட்ல எந்த பந்­தா­வும் பண்­ணலே. நடிக்­கி­ற­போது எப்­படி ஜாலியா இருந்­தேனோ அப்­ப­டித்­தான் இப்­ப­வும் செட்ல சந்­தோ­ஷமா இருந்­தேன்.