ரெடி­யாகி விடு­கி­றார்!

10 மார்ச் 2018, 06:08 PM

சிம்பு என்­றாலே வம்­பு­தான் என்­பார்­கள். அவரை வைத்து ஒரு படம் இயக்­கு­வ­தற்­குள் போதும் போதும் என்­றாகி விடும் என்று அவரை வைத்து படம் இயக்­கி­ய­வர்­கள் சலிப்­பு­டன் கூறி வந்­த­னர். ஆதிக்­ர­விச்­சந்­தி­ரன் இயக்­கத்­தில் சிம்பு நடித்த, 'அன்­பா­ன­வன் அச­ரா­த­வன் அடங்­கா­த­வன்' படம் தோற்­றுப்­போ­ன­தற்கு கார­ணமே சிம்­பு­தான் என்­றார்­கள்.

அவர் ஒரு ­நாள் கூட ஒழுங்­காக படப்­பி­டிப்­புக்கு வந்­த­தில்லை என்று குற்­றம் சாட்டி, அவ­ரி­டத்­தில் ரூ.18 கோடி நஷ்­ட­ஈடு கேட்­டார் அந்த படத்­தின் தயா­ரிப்­பா­ளர் மைக்­கேல் ராயப்­பன். அதை­ய­டுத்து சிம்­பு­விற்கு ரெட்­கார்டு போடும் நிலை­யும் உரு­வா­னது.

இந்த சூழ்­நி­லை­யில், தற்­போது மணி­ரத்­னம் இயக்கி வரும் 'செக்­கச்­சி­வந்த வானம்' படத்­தில் நடித்து வரு­கி­றார் சிம்பு. இது­நாள் வரை படப்­பி­டிப்பு ஒன்­பது மணிக்கு என்­றால், மதி­யத்­திற்கு பிற­கு­தான் ஸ்பாட்­டில் சிம்பு தலை­காட்­டு­வார் என்று கூறப்­பட்டு வந்த நிலை­யில், இந்த படத்­தில் ஒன்­பது மணி என்­றால் அதற்கு முன்பே சென்று மேக்­கப் போட்டு தயா­ராகி விடு­கி­றா­ராம் சிம்பு. இத­னால் படக்­கு­ழுவே அவரை ஆச்­சரியத்­து­டன் பார்க்­கி­ற­தாம்.