மம்தா ஜோடி!

10 மார்ச் 2018, 06:07 PM

'மெர்­குரி', ‘யங் மங் சங்’, ‘சார்லி சாப்­ளின்- 2’, ‘லட்­சுமி’ என பல படங்­க­ளில் நடிக்­கும் பிரபுதேவா, ‘ஊமை விழி­கள்’ என்ற படத்­தி­லும் நடிக்­கி­றார்.  அறி­முக இயக்­கு­னர் ஆகாஷ் ராம் இயக்­கும் இந்த படத்­தின் படப்­பி­டிப்பு சமீ­பத்­தில் ஊட்­டி­யில் துவங்கி, தொடர்ந்து நடந்து வரு­கி­றது.  இந்­நி­லை­யில் இந்த படத்­தில் கதா­நா­ய­கி­யாக நடிக்க மலை­யாள நடிகை மம்தா மோகன்தாஸ் ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளார்! இந்த தக­வலை மம்தா மோகன்தாஸே இன்ஸ்­டா­கி­ராம் மூலம் உறு­திப்­ப­டுத்தியுள்­ளார். அதில் ‘ஆறு ஆண்­டு­க­ளுக்கு பிறகு மீண்­டும் ஒரு தமிழ் படத்­தில் நடிக்க போகி­றேன்’ என்று மம்தா மோகன்தாஸ் குறிப்­பிட்­டுள்­ளார்.  தமி­ழில் ஏற்­க­னவே விஷா­லு­டன் ‘சிவப்­ப­தி­கா­ரம்’ மாத­வ­னு­டன் ‘குரு என் ஆளு’, அருண் விஜ­யு­டன் ‘தடை­யற தாக்க’ உட்­பட பல தமிழ் படங்­க­ளில் நடித்­துள்ள மம்தா மோகன்­தாஸ், இப்­போது ‘ஊமை விழி­கள்’ படம் மூலம் பிர­பு­தே­வா­வுக்கு ஜோடி­யா­கி­றார்.  இந்த படம் தவிர பார்த்­தி­பன் இயக்கி நடிக்­கும் ‘உள்ளே வெளியே -2’விலும் மம்தா மோகன் தாஸ் நடிக்­க­வி­ருக்­கி­றா­ராம்! மலை­யா­ளத்­தில் ஏரா­ள­மான படங்­க­ளில் நடித்­துள்ள மம்தா மோகன்தாஸ் ஒரு சிறந்த பாடகி!