எல்லா ஹீரோ கூடவும் நடிக்கணும்! –- நமிதா பிர­மோத்

13 பிப்ரவரி 2018, 04:11 PM

''பி.ஏ. சோஷி­யா­லஜி படிச்­சுக்­கிட்டு இருக்­கேன். ஸ்கூலிங் முடிச்சு கொஞ்ச நாள் கல்­லூரி. ஆனால் நடிப்பு கார­ணமா தொடர முடி­யல. ஆனா­லும் விடாம முயற்சி செய்­துக்­கிட்டே இருந்­தேன். எனக்கு சினிமா ஏழா­வது படிக்­கும்­போதே ஆரம்­பிச்­சி­டுச்சு. அதுக்­காக நான் படிப்பை ஓரங்­கட்ட நினைக்­கலை. இப்போ படிப்பு, நடிப்பு ரெண்­டை­யும் ஜாலியா செய்­துக்­கிட்டு இருக்­கேன்'' என்­கி­றார் நமிதா பிர­மோத். சமீ­பத்­தில் வெளி­வந்த 'நிமிர்' படத்­தில் நாய­கி­யாக நடித்­தி­ருந்­த­வர். மேலும் அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து...

* படிப்பு, நடிப்பு எப்­படி?

அந்­தந்த நேரத்­திேல அந்­தந்த வேலைய செய்­தி­டு­வேன். எனக்கு படிக்­கப் பிடிக்­கும். அடுத்து எம்.ஏ. சோஷி­யா­லஜி, எம்.பில் இப்­ப­டி­யெல்­லாம் ஒரு அஞ்சு வரு­ஷத்­துக்கு பிளான் ரெடி. ஒரு வேளை நடிக்க வர­லேன்னா நிச்­ச­யம் புரொ­ப­சரா ஏதா­வது ஒரு கல்­லூ­ரி­யிலே வேலைக்கு சேர்ற திட்­டம்­தான் எனக்கு இருந்­துச்சு. ஆனால் வாழ்க்கை எங்­கேயோ கொண்டு வந்து நிறுத்­தி­டுச்சு.

சூப்­பர்ல. நான் குழந்­தையா சீரி­யல்­கள்ல நடிச்­சுக்­கிட்டு இருந்­தேன். ஒரு இயக்­கு­நர் வீட்­டுக்கே வந்து என்­னைக் கூப்­பிட்டு போனாங்க. ‘டிரா­பிக்’ செம ஹிட் படம். அதிேல குழந்­தையா நடிச்­சேன். அப்­பு­றம் ’புதிய தீரங்­கள்’ படம் மூலமா விரு­து­கள் சூழ என்­னு­டைய சினிமா கேரி­யர் ஆரம்­பிச்­சி­டுச்சு.

* தமி­ழுக்கு நீங்க முன்­னா­டியே வந்­தி­ருக்­க­ணுமே?

தமி­ழுக்கு நான் ஏழெட்டு வரு­ஷங்­க­ளுக்கு முன்­னா­டியே வந்­தி­ருக்­க­ணும். நான் ஏழா­வது படிக்­கும்­போதே குழந்தை நட்­சத்­தி­ரமா அறி­மு­க­மா­கி­யி­ருக்­க­ணும். அந்த படம் ஏதோ கார­ணமா டிராப் ஆயி­டுச்சு.

திரும்ப அதே டீம் என்­னைக் கேட்­கும்­போது நான் பத்­தா­வது படிச்­சுக்­கிட்டு இருந்­தேன். அப்­பு­றம் வேற ஒரு பொண்ணை வச்சு படத்தை முடிச்­சிட்­டாங்க. எது எப்போ நடக்­க­ணுமோ, அப்போ அது நடந்­தா­தானே நல்லா இருக்­கும்? இல்­லேன்னா ‘நிமிர்’ வாய்ப்பு கிடைச்­சி­ருக்­குமா? ஒரு பிலிம்­பேர் விருது விழா­விேல பார்த்­துட்டு கோ டைரக்­டர் கூப்­பிட்­டுப் பேசி­னாரு. அப்­பு­றம் லெஜண்ட் பிரி­ய­தர்­ஷன் சார் படம் ‘நிமிர்’ ரிலீஸ் ஆயி­டுச்சு!

* தமிழ், மலை­யா­ளம் வித்­தி­யா­சம்?

 சினி­மா­விேல மொழி வித்­தி­யா­சம் பார்க்க முடி­யாது. கலா­சார வித்­தி­யா­சம் இருக்­கும். ஆனால் பக்­கத்து பக்­கத்து மாநி­லம். அத­னால, பெரும்­பா­லும் நமக்­குப் பழக்­க­மான புரி­தல்­கள் கலா­சா­ரம்­தானே!

* அடுத்து?

மலை­யா­ளத்­திலே திலீப் கூட ‘கம்­மர சம்­ப­வம்’ படத்­திேல நடிச்­சுக்­கிட்டு இருக்­கேன். கூடிய விரை­வில் தமிழ்­நாட்­டிே­ல­தான் மீதி ஷூட். இந்த படம் ஒரு ஹிஸ்­டா­ரிக்­கல் படம். தமிழ் ஹீரோ சித்­தார்த் கூட இன்­னொரு ஹீரோவா நடிக்­கி­றாரு. அடுத்­ததா ‘புர­ப­சர் தின்­கன்’. அது­வும் திலீப் கூட­தான். இது ஒரு பேன்­டஸி படம். 3டியிேல வெளி­யிட முடிவு செய்­தி­ருக்­காங்க.

* பொழு­து­போக்கு?

எனக்கு புத்­த­கம் படிக்­க­வும், எழு­த­வும் ரொம்ப பிடிக்­கும். நிறைய சிறு கதை­கள் எழு­து­வேன். பிக்­க்ஷன் என் சாய்ஸ்.

* யார் மேல கிரஷ்?

ஓ மை காட்! மாட்­டி­வி­டு­றீங்­களே… எனக்கு நடிக்­க­ணும்னா எல்லா ஹீரோ கூட­வும் நடிக்­க­ணும். ஒவ்­வொ­ருத்­த­ருக்­கும் ஒவ்­வொரு திறமை உண்டு. அதிலே எல்­லாம் எந்த லிமிட்­டும் கிடை­யாது. ஆனால் கிரஷ்ன்னா சின்ன வய­சிேல இருந்தே ஹ்ருத்­திக் ரோஷனை ரொம்ப பிடிக்­கும்.

* காதல்?

காதல், அழ­கான உணர்வு. உண்­மையா இருக்­க­ணும், இயல்பா நடந்­துக்­க­ணும். புரொ­போ­ஸல் நிறைய இருக்கு. மறக்­க­மு­டி­யாத ஒரு புரொ­போ­ஸலை சொல்­றேன். ஒரு பையன் ஷூட்­டிங்­போது பொக்கே, கடி­தம் சகி­தமா கையில வெச்­சுக்­கிட்டு என்­னு­டைய கேர­வன் பக்­கத்­தி­லேயே நின்­னுக்­கிட்டு இருப்­பான்.

ஒரு நாள் கூப்­பிட்டு என்ன விஷ­யம்னு விசா­ரிச்­சேன். ஒரு லெட்­டரை நீட்­டி­னான். பிரிக்க ஆரம்­பிச்சா, ஐயோ இங்கே படிக்­கா­தீங்­கன்னு சொன்­னான். கேர­வன்ல படிச்சா அவ்ளோ பெரிய லவ் லெட்­டர், பொக்கே, அது கூட ஒரு கோல்ட் ரிங். எங்­கப்பா அவனை பொறு­மையா பேசி அனுப்பி வச்­சாரு. நானும் சில அட்­வைஸ் கொடுத்து அனுப்­பிட்­டேன். மறக்­கவே முடி­யாது.