சென்னையில் சன்னி லியோன்!

13 பிப்ரவரி 2018, 04:08 PM

வி.சி. வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்க இருக்கும் படம் ‘வீரமாதேவி’ என்றும், சரித்திர கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது என்றும்  ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது. ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சன்னி லியோன் கதையின் நாயகியாக நடிக்கும் ‘வீரமாதேவி’ படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை ’ஸ்டீவ்ஸ் கார்னர்’ நிறுவனம் சார்பில் பொன்ஸ் ஸ்டீபன் தயாரிக்க, அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார். சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவிருக்கிறதாம்.