சபதம் போட்ட பிரபலங்கள்!

13 பிப்ரவரி 2018, 04:07 PM

டில்­லி­யில் நிகழ்ந்த அர­சி­யல் சம்­ப­வம் ஒன்றை அடிப்­ப­டை­யாக வைத்து, ‘சிவா மன­சில புஷ்பா’ என்ற திரைப்­ப­டத்தை வராகி என்­ப­வர் நடித்து, இயக்கி உள்­ளார். இந்த படத்­தின் ஆடியோ வெளி­யீட்டு விழா சமீ­பத்­தில் சென்­னை­யில் நடை­பெற்­றது. விழா­வில் கலந்து கொண்டு பேசிய நடி­கர் ஜே.கே. ரித்­தீஷ், ''நடி­கர் சங்­கத்­திலே இந்த முறை விஷால் நிற்­கட்­டும். அவரை எதிர்த்து நிக்­கி­ற­வங்க கூட நான் நிப்­பேன். விஷால் என்ன சொன்­னா­லும் அதை ஏத்­துக்க யாரு­மில்லே. செங்­கல்லை வச்சு கட்­ட­டம் கட்­டினா மட்­டும் புண்­ணி­யம் வராது. சங்­கத்­திலே இருக்­கிற உறுப்­பி­னர்­களை மதிக்­கத் தெரி­ய­ணும். இந்த சங்­கம் எங்­க­ளு­டை­யது. ஆகஸ்ட்ல இருந்து நாங்­க­தான் பத­வி­யிலே உட்­கா­ரப்­போ­றோம். தென்­னிந்­திய நடி­கர் சங்­கத்­துக்­குள் விஷால் இனிமே நுழை­யவே முடி­யாது.'' அவரை நடி­கர் சங்­கத்தை விட்டே துரத்­தப் போவ­தா­கக் குறிப்­பிட்­டார்.

அடுத்து பேச வந்த தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்­சியோ, ''விஷால் கியூப்­புக்கு எதிரா ஒரு ஸ்டிரைக் அறி­விச்­சி­ருக்­காரு. ஆந்­தி­ரா­வில் கியூப்­கிட்ட பேச்­சு­வார்த்தை நடத்­தப்­போ­றோம். அது சரி­வ­ர­வில்­லை­யெ­னில், ஸ்டிரைக்­குன்னு சொல்­றாங்க. இவர் பேசா­மலே ஸ்டிரைக் அறி­விக்­கி­றார். இவ­ரோட படம் ‘இரும்­புத்­திரை’ மார்ச் 29-ம் தேதி ரிலீஸ் பண்­றார். அதுக்­குள்ளே ஸ்டிரைக் முடிஞ்­சி­டும்.

ஆனா, ஸ்ட்ரைக் இருக்­கிற சம­யங்­கள்ல வெளி­வர இருக்­கிற சின்­னப் படங்­க­ளோட நிலைமை என்ன ஆகு­றது?'' என்று ஆவே­ச­மாக தெரி­வித்­தார்.

ஒரே மேடை­யில் இரண்டு திரை­யு­லக பிர­ப­லங்­கள் விஷா­லுக்கு எதி­ராக கம்பு சுற்­றி­யது விழா­வுக்கு வந்­தி­ருந்­த­வர்­களை புரு­வம் உயர்த்த வைத்­தது.

விழா­வின் இறு­தி­யில் 100 நலி­வ­டைந்த திரை­யு­லக கலை­ஞர்­க­ளுக்கு தலா 10,000 ரூபாய் ரொக்­கப்­ப­ணம் வழங்­கப்­பட்­டது.