'எனக்கு இன்­னும் கல்­யா­ணம் ஆகலே!'

13 பிப்ரவரி 2018, 04:05 PM

ராஜா­மணி தியா­க­ரா­ஜன் முத்து விநா­யகா மூவீஸ் நிறு­வ­னத்­தின் சார்­பில் காரைக்­குடி நாரா­ய­ணன் கதை, திரைக்­கதை, வச­னத்­தில் ‘எனக்கு இன்­னும் கல்­யா­ணம் ஆகலே’ என்ற நகைச்­சுவை கலந்த படத்தை தயா­ரித்து வரு­கி­றார்.

வேக­மாக வளர்ந்து வரும் இந்த படத்­தில் கதா­நா­ய­க­னாக நகைச்­சுவை நடி­கர் ஜெகன், மோனிகா, கவி­ஞர் பிறை­சூ­டன், சேரன் ராஜ், சாம்ஸ், விவேக் ராஜ், ரவி, நிகிதா, டிஸோசா, கொட்­டாச்சி, வின்­னர் ராமச்­சந்­தி­ரன், அம்­பானி சங்­கர், இவர்­க­ளு­டன் லட்­சுமி என்ற பசு­மாடு கதைக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கும் வேடத்­தில் நடிக்­கி­றது.

ஒளிப்­ப­திவு -– ஆர். சிவ­ராஜ், இசை -– கே.ஆர். கவின் சிவா, எடிட்­டிங் – - துரை­ராஜ், நட­னம் – - ராதிகா, கலை – ராகவா குமார், பாடல்­கள் – பிறை­சூ­டன், காரைக்­குடி நாரா­ய­ணன், இயக்­கம் -– முரு­க­லிங்­கம். இந்த படத்­தின் படப்­பி­டிப்பு சிவ­கங்கை மாவட்­டத்­தி­லுள்ள பல முக்­கி­ய­மான பகு­தி­க­ளி­லும், மற்­றும் சென்னை தாம்­ப­ரம், கொளத்­தூர் போன்ற இடங்­க­ளி­லும் நடந்து வரு­கி­றது.