கலக்கும் சமந்தா!

13 பிப்ரவரி 2018, 04:04 PM

திருமணத்துக்கு பிறகும் சமந்தா சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் தொடர்ந்து முன்னணி இடத்திலேயே இருக்கிறார். சமந்தா விஜய்யுடன்

நடித்த ‘மெர்சல்’ படம் வெற்றி பெற்றது. மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தாலும் இவருடைய பாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

தெலுங்கில் சமந்தா நடித்த ‘ராஜூகாரிகதி- 2’ எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்றாலும், தெலுங்கு படவாய்ப்புகள் குறையவில்லை.

சமந்தா தமிழில், விஷாலுடன் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ தெலுங்கிலும் டப் ஆகி இருக்கிறது. தமிழ், தெலுங்கில் தயாராகி இருக்கும் ‘சாவித்ரி வாழ்க்கை’ படத்திலும் சமந்தா நடித்திருக்கிறார். இதற்கு தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மார்ச் 29ம் தேதி தமிழ், தெலுங்கில் ‘இரும்புத்திரை’யும், 'சாவித்ரி வாழ்க்கை' படமும் திரைக்கு வருகின்றன. இது தவிர, தெலுங்கில் ராம்சரண் ஜோடியாக சமந்தா நடித்துள்ள ‘ரங்கஸ்தலம்’ படம் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. சமந்தா நடித்த மூன்று படங்கள் இரண்டு நாட்களில் அடுத்தடுத்து ரிலீஸாவது ரசிகர்களி டையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.