‘சூப்பர் டீலக்ஸ்’ சமந்தா!

10 ஜனவரி 2018, 12:16 AM

விஜய் சேது­பதி நடிப்­பில் தற்­போது பல படங்­கள் உரு­வாகி வரு­கின்­றன. இதில் ‘சூப்­பர் டீலக்ஸ்’ படத்தை ‘ஆரண்ய காண்­டம்’ புகழ் தியா­க­ரா­ஜன் குமா­ர­ராஜா இயக்கி வரு­கி­றார். இதில் விஜய் சேது­ப­தி­யு­டன் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்­ணன், பக­வதி பெரு­மாள், இயக்­கு­நர் மிஷ்­கின் ஆகி­யோர் மிக முக்­கிய வேடங்­க­ளில் நடித்து வரு­கின்­ற­னர். இப்­ப­டத்­தில் விஜய் சேது­பதி திரு­நங்­கை­யாக வலம் வர­வுள்­ளார்.

தியா­க­ரா­ஜன் குமா­ர­ரா­ஜாவே தனது சொந்த தயா­ரிப்பு நிறு­வ­னம் மூலம் தயா­ரித்து வரு­கி­றார். யுவன் சங்­கர் ராஜா இசை­ய­மைத்து வரும் இதற்கு பி.எஸ். வினோத் – நிரவ்ஷா ஒளிப்­ப­திவு செய்­கின்­ற­னர். இயக்­கு­நர்­கள் மிஷ்­கின் – - நலன் குமா­ர­சாமி இணைந்து கூடு­தல் திரைக்­கதை எழு­தி­யுள்­ள­னர்.

சமீ­பத்­தில், வெளி­யி­டப்­பட்ட விஜய் சேது­ப­தி­யின் கேரக்­டர் 'ஷில்பா' என்று அறி­வித்து அதன் புகைப்­ப­டத்­தை­யும் வெளி­யிட்­ட­னர். இந்த புகைப்­ப­டம் சமூக வலை­த­ளங்­க­ளில் வைர­லா­னது. தற்­போது, சமந்தா கேரக்­டர் பெயர் அறி­வித்­தி­ருக்­கின்­ற­னர். இப்­ப­டத்­தில் சமந்­தா­வின் கதா­பாத்­தி­ரம் 'வேம்பு' என்­றும் அதற்­கான டீசர் ஒன்­றை­யும் வெளி­யிட்­டுள்­ள­னர். இந்த டீசர் ரசி­கர்­க­ளி­டையே வர­வேற்பு பெற்று வைர­லாகி வரு­கி­றது.