எந்த வேடத்திலும் நடிப்பேன்!

10 ஜனவரி 2018, 12:15 AM

பூமிகா கடந்த சில ஆண்­டு­க­ளாக சினி­மாவை விட்டு ஒதுங்கி இருந்­தார். இப்­போது தெலுங்­கில் நானி, சாய் பல்­லவி நடிப்­பில் வெளி­யாகி இருக்­கும் ‘எம்­சிஏ’ படத்­தில் முக்­கிய வேடத்­தில் நடித்­தி­ருக்­கி­றார். இந்த படம் வெற்றி பெற்று இருக்­கி­றது. பூமி­கா­வின் பாத்­தி­ரம் ரசி­கர்­க­ளி­டம் வர­வேற்பை பெற்­றுள்­ளது. நடிப்­பும் பேசப்­ப­டு­கி­றது. இதை தொடர்ந்து நாக சைதன்யா நடிக்­கும் ‘ஷாவ்­யா­சச்சி’ படத்­தி­லும் பூமிகா நடிக்­கி­றார்.

மீண்­டும் சினி­மா­வுக்கு திரும்பி இருப்­பது குறித்து கூறிய பூமிகா....

''‘எம்­சிஏ’ படம் எனக்கு திரை உல­கில் மீண்­டும் வலம் வர ஒரு வாய்ப்பை வழங்கி இருக்­கி­றது. இத­னால் மகிழ்ச்சி அடைந்­தி­ருக்­கி­றேன். தற்­போது பல இயக்­கு­னர்­கள் என்­னி­டம் கதை சொல்லி வரு­கி­றார்­கள்.

இப்­ப­டிப்­பட்ட வேடத்­தில்­தான் நடிப்­பேன் என்று நான் சொல்­ல­மாட்­டேன். எந்த வேட­மாக இருந்­தா­லும், அது ஏதா­வது ஒரு வகை­யில் கதை­யு­டன் சம்­பந்­தப்­பட்­ட­தாக இருந்­தால், நிச்­ச­யம் அதில் நடிப்­பேன். எனது வயதை மீறிய நல்ல அனு­ப­வ­மான வேடங்­க­ளில் அதி­க­மாக நடிக்க வேண்­டும் என்று விரும்­பு­கி­றேன். என்னை நேசிக்­கும் ரசி­கர்­க­ளுக்கு நன்றி” என்­றார்.