எதிர்ப்பா?

10 டிசம்பர் 2017, 01:53 AM

ஷங்­கர் இயக்­கத்­தில், ரஜினி நடிக்­கும் '2.0' படம், ஜன­வரி 26ம் தேதி வெளி­யா­வ­தாக இருந்­தது. அதே சம­யம், '2.0' படத்­தில் வில்­ல­னாக நடிக்­கும் பாலி­வுட் நடி­க­ரான அக்­க்ஷய்­கு­மா­ரு­டைய நடிப்­பில் பாலி­வுட்­டில் உரு­வா­கி­யி­ருக்­கும் 'பேட்­மேன்' படம் ஜன­வரி 26-ல் வெளி­யா­கும் என அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது. அதன் பின்­னரே '2.0' படம்  ஜன­வ­ரி­யில் ரிலீ­ஸா­வ­தில்  சிக்­கல் இருப்­பது தெரிய வந்­தது.

பிறகு வேறு­வ­ழி­யில்­லா­மல் '2.0' பட ரிலீஸை ஏப்­ர­லுக்கு மாற்­றி­யி­ருப்­ப­தாக அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­வித்­தது லைகா புரொ­டக்­க்ஷன் நிறு­வ­னம். அந்த அறி­விப்­பில் எந்த தேதி என்ற விவ­ரம் இல்­லை­யென்­றா­லும், டிரேட் வட்­டா­ரங்­க­ளில் நாம் விசா­ரித்­த­வரை ஏப்­ரல் 27ம் தேதி படத்தை ரிலீஸ் செய்­யவே டீம் திட்­ட­மிட்­டி­ருப்­ப­தாக தக­வல் கிடைத்­தது.

இந்­நி­லை­யில் ஏப்­ரல் மாதம் '2.0' படத்தை வெளி­யிட தெலுங்கு பட தயா­ரிப்­பா­ளர்­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளார்­க­ளாம். அந்த தேதி­க­ளில் நேரடி தெலுங்கு படங்­களை வெளி­யிட திட்­ட­மிட்­டுள்­ள­தால் '2.0' படத்தை வெளி­யி­டக்­கூ­டாது என்­பது அவர்­க­ளு­டைய கருத்து.