பட்டியல் போட்டு சொல்லட்டுமா? – ஷாதிகா

06 டிசம்பர் 2017, 01:41 AM

சுசீந்­தி­ரன் இயக்­கத்­தில் சமீ­பத்­தில் வெளி­வந்த படம் ‘நெஞ்­சில் துணி­வி­ருந்­தால்’. அதில் ஹீரோ சந்­தீப்­பின் தங்கை, விக்­ராந்­தின் காதலி என இரு பரி­மா­ணங்­க­ளில் இயல்­பான நடிப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார் ஷாதிகா. அவரை சந்­தித்­துப் பேசி­ய­தி­லி­ருந்து...

* உங்­களை அறி­மு­கம் செய்து கொள்­ளுங்­கள்.

அரி­ரா­ஜன் சாரின் ‘மங்கை’ தொலைக்­காட்­சித் தொட­ரில் இரண்டு வயது சிறு­மி­யாக என்னை நடிக்க வைத்து விட்­டார்­கள். சீமான் அண்­ண­னின் ‘வீர­நடை’ படம்­தான் சிறு­மி­யாக நான் நடித்த முதல் படம். அதன் பிறகு ‘ரோஜா­வ­னம்’ படத்­தில் குட்டி லைலா, ‘குபே­ரன்’ படத்­தில் கவு­சல்­யா­வின் மகள், ‘சமஸ்­தா­னம்’ படத்­தில் சரத்­தின் மகள், ‘ராமச்­சந்­திரா’ படத்­தில் சத்­ய­ரா­ஜின் மகள், ‘ஆனந்­தம்’ படத்­தில் முர­ளி­யின் மகள், தமிழ் சினிமா என்­னைப் பிரி­யத்­துக்­கு­ரிய மக­ளாக வளர்த்து எடுத்­தி­ருக்­கி­றது. கொஞ்­சம் வளர்ந்து பெரிய பெண் ஆன­தும் விஜய் அண்­ணா­வின் ‘குரு­வி’­­யில் அவ­ரது தங்­கை­யா­க­வும் ‘மாசி­லா­மணி’ படத்­தில் சுனை­னா­வின் தங்­கை­யா­வும் பல தங்கை கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்து முப்­பது படங்­க­ளைக் கடந்து வந்து விட்­டேன்.

இதற்­கி­டை­யில் சுட்டி டிவி­யில் தொகுப்­பா­ள­ராக மூன்று வரு­டங்­கள் சூப்­ப­ரான அனு­ப­வம். எனது குர­லைப் பார்த்து பல குழந்தை நட்­சத்­தி­ரங்­க­ளுக்­குப் பின்­ன­ணி­கு­ரல் கொடுக்­கும் வாய்ப்­பை­யும் அள்­ளிக்­கொ­டுத்து விட்­டார்­கள். அதி­லும் ஒரு கை பார்த்­து­விட்டு நிமிர்ந்­தால், குறும்­ப­டங்­க­ளில் நடிக்க வரி­சை­யாக அழைப்பு. நான் நடித்த ‘என் வீட்டு முற்­றத்­தில் ஒரு மாம­ரம்’ பெர்­லின் சர்­வ­தே­சப்­பட விழா­வில் திரை­யிட தேர்­வா­னது. நடி­கர், இயக்­கு­நர் ரேவதி மேடம் இயக்­கத்­தில் ‘கயல்­விழி’ என்­கிற குறும்­ப­டத்­தில் நான்­தான் கயல்­விழி.

* ‘நான் மகான் அல்ல’ படத்­தில் நடித்­தி­ருந்­த­தைச் சொல்ல மறந்­து­விட்­டீர்­களே?

எப்­படி மறக்க முடி­யும்? அந்த படம்­தான் சினி­மா­வில் எனக்கு பிரேக். எவ்­வ­ளவு படங்­க­ளில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்­தி­ருந்­தா­லும் நான் வளர்ந்­த­பின் எனக்­குக் கிடைத்த நல்ல வாய்ப்­பாக ‘நான் மகான் அல்ல’ அமைந்து விட்­டது. ரசி­கர்­கள் என்னை எங்கே பார்த்­தா­லும் அடை­யா­ளம் கண்டு “ஹாய்” சொல்­கி­றார்­கள் என்­றால் அதற்கு கார­ணம் சுசீந்­தி­ரன் சார்­தான். அவ­ரைப் பொறுத்­த­வரை சிலரை கம்­பெனி ஆர்­டிஸ்ட் மாதிரி வைத்­தி­ருப்­பார். அவர் எப்­போது கூப்­பிட்­டா­லும் படப்­பி­டிப்­புக்­குக் கிளம்பி விடு­வேன். ஏனென்­றால், சிறிய கதா­பாத்­தி­ரம் கொடுத்­தா­லும் அழுத்­த­மா­கப் பதிந்­து­வி­டும் ஒன்­றாக அது இருக்­கும். ‘பாயும் புலி’ படத்­தில் விஷா­லின் தங்கை, ‘மாவீ­ரன் கிட்­டு’­­வில் ஸ்ரீதிவ்­யா­வின் தோழி என அவ­ரது இயக்­கத்­தில் தொடர்ந்து நடிக்க வைத்து கொண்­டி­ருக்­கி­றார். இப்­போது ‘நெஞ்­சில் துணி­வி­ருந்­தால்’ படத்­தில் என்­னைச் சுற்­றியே கதை வரு­கி­றது. படம் வெளி­யா­னது முதல் ஒரே பாராட்டு மழை. இப்­போது சுசீந்­தி­ரன் சாரின் ‘ஏஞ்­ச­லினா’ படத்­தில் முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் நடித்து வரு­கி­றேன்.

* தொடர்ந்து 'தங்­கச்சி' வேடத்­தில் நடித்­தால் கதா­நா­யகி வாய்ப்பு கிடைக்­காது என்­பார்­களே?

இது நமது கற்­பனை. குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்து, பின் தங்கை, கதா­நா­யகி, கன­வுக்­கன்னி என்று உயர்ந்த நடி­கர்­க­ளைப் பட்­டி­யல் போட்டு உங்­க­ளுக்­குக் காட்­டட்­டுமா? பத்து நிமி­டங்­கள் வந்து போகிற கேரக்­ட­ராக இருந்­தா­லும் மன­தில் பதி­கிற கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்­துக்­கொண்டி ருந்­தால் கதா­நா­யகி வாய்ப்பு கட்­டா­யம் வரும். சினி­மா­வில் தமிழ் பேசத் தெரிந்த, நல்ல குரல்­வ­ளம் கொண்ட, நடிக்­கத் தெரிந்த தமிழ் பெண்­கள் குறைவு. இந்த மூன்று முக்­கி­ய­மான தகு­தி­கள் எனக்கு இருப்­ப­தாக நினைக்­கி­றேன். என்­னைத்­தேடி வந்த வாய்ப்­பு­க­ளால்­தான், நான் இந்த அள­வுக்கு வளர்ந்து நிற்­கி­றேன். எனக்­கேற்­ற­படி கதா­நா­யகி வாய்ப்­பு­கள் வரும் என்று நம்­பு­கி­றேன். அதற்கு அதி­கம் காத்­தி­ருக்க வேண்­டி­ய­தில்லை என்று நினைக்­கி­றேன்.

* உங்­க­ளால் பள்­ளிக்­கூ­டம் போக முடிந்­ததா?

நான் ஒரே பெண். அதிக செல்­லம்­தான். ஆனால், சலு­கை­கள் படிப்­பில் எல்­லாம் கிடை­யாது. படப்­பி­டிப்பு நாட்­கள் போக சனிக்­கி­ழ­மை­கூ­டப் பள்­ளிக்கு அனுப்பி விடு­வார் அம்மா. நானும் படிப்பை ஒரு சுமை­யாக எடுத்­துக் கொண்­ட­தில்லை. பிளஸ் ௨வில் 90 சத­வீத மதிப்­பெண்­கள் எடுத்­தேன். பி.இ. கம்ப்­யூட்­டர் சயின்ஸ் முடித்து விட்­டேன். நடித்­துக் கொண்டே எம்.பி.ஏ. படிக்க வேண்­டும் என்­பது திட்­டம்.