அமிதாப் கொடுத்த பரிசு!

06 டிசம்பர் 2017, 01:36 AM

சமீ­பத்­தில் வெளி வந்து ஓடிக்­கொண்­டி­ருக்­கும் 'திருட்டு பயலே 2' படத்­திற்கு ரசி­கர்­களும் விமர்­ச­கர்­க­ளும் பாராட்டி வரு­கி­றார்­கள். குறிப்­பாக இப்­ப­டத்­தின் ஒளிப்­ப­திவை பலர் 'சூப்­பர்' என்­கி­றார்­கள். அத்­தனை பாராட்­டுக்­க­ளை­யும் பெற்­றுக் கொண்டு தன்­ன­டக்­க­மா­கவே பேசு­கி­றார் கேம­ரா­மேன் பி. செல்­லத்­துரை. அவர் கூறி­ய­தா­வது...

''சங்­க­ரன்­கோ­வில் பக்­கத்­தி­லுள்ள தெற்கு அச்­சன் புதூர் என் சொந்த ஊர். விவ­சாய குடும்­பத்­தில் பிறந்த எனக்கு சின்ன வய­தி­லி­ருந்து போட்­டோ­கி­ராபி மீது பெரிய ஆர்­வம். அந்த ஆர்­வமே பிற்­பாடு சினிமா ஆசை­யில் என்னை சென்­னைக்கு அழைத்து வந்­து­விட்­டது. கோடம்­பாக்­கத்­தில் இறங்­கிய பிற­கு­தான் தெரிந்­தது சினிமா வாய்ப்பு என்­பது அவ்­வ­ளவு சுல­பம் இல்லை என்று.

நீண்ட போராட்­டங்­க­ளுக்கு பிறகு ஒளிப்ப­தி­வாளர்­கள் கே.வி. ஆனந்த், ரவி­வர்­மன், திரு ஆகி­யோ­ரி­டம் இணை ஒளிப்­ப­தி­வா­ள­ரா­க­வும், இரண்­டா­வது யூனிட் கேம­ரா­மே­னா­க­வும் பணி­யாற்­றி­யுள்­ளேன். இவர்­க­ளு­டன் நான் பல இந்தி படங்­க­ளுக்கு பணி­யாற்­றி­ய­து­தான் அதி­கம்.

'காக்கி' என்ற இந்தி படத்­தில் பணி­யாற்­றும் போது ஒரு பனை மர உச்­சி­யில் ஏறி லைட் கட்ட வேண்­டும். அங்­கி­ருந்­த­வர்­கள் அவ்­வ­ளவு பெரிய பனை மரத்­தில் ஏறு­வ­தற்கு தயங்­கிய போது நான் எதைப்­பற்­றி­யும் கவ­லைப்­ப­டா­மல் ஏறி அந்த விளக்கை கட்­டி­னேன். அதை பாராட்டி நடி­கர் அமி­தாப் பச்­சன் எனக்கு ஐந்து ஆயி­ரம் ரூபாய் பரிசு கொடுத்­தார். அந்த பணத்தை இன்­னும் செலவு செய்­யா­மல் அப்­ப­டியே வைத்­துள்­ளேன்.

இந்த 'திருட்டு பயலே 2' படத்­தில் ஒளிப்­ப­தி­வா­ள­ராக பணி­யாற்ற இயக்­கு­னர் சுசி கணே­சன் வாய்ப்­ப­ளித்­தார். அதை நான் சிறப்­பாக செய்­துள்­ள­தாக பாராட்­டுக்­கள் குவிகின்றன. அந்த பாராட்­டுக்­கள் அத்­த­னை­யும் சுசி கணே­ச­னையே சேரும்'' என்­றார்.