மீண்டும் வந்துவிட்டார்!

06 டிசம்பர் 2017, 01:34 AM

வசந்­த­பா­லன் இயக்­கிய 'வெயில்' படத்­தில் அறி­மு­க­மா­ன­வர் பிரி­யங்கா. அதில் பசு­பதி ஜோடி­யாக நடித்­தார். அதன் பிறகு 'தொலை­பேசி,' 'திருத்­தம்,' 'செங்­காத்து பூமி­யிலே,' 'வானம் பார்த்த பூமி­யிலே' படங்­க­ளில் நடித்­தார். அதன் பிறகு தமி­ழில் சரி­யான வாய்ப்­பு­கள் இல்­லா­மல் மலை­யாள படங்­க­ளில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

இப்­போது ஐந்து வரு­டங்­க­ளுக்கு பிறகு மீண்­டும் தமி­ழில் நடிக்­கி­றார். கின்­னஸ் புரொ­டக்­க்ஷன் தயா­ரிப்­பில், நவீன் கணேஷ்  இயக்­கத்­தில் உரு­வாக இருக்­கும் 'தீயோ­ருக்கு அஞ்­சேல்' படத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மா­கி­யி­ருக்­கி­றார். இது குறித்து 'வெயில்' பிரி­யங்கா கூறி­ய­தா­வது:

''நான் கேர­ளா­வில் பிறந்­தா­லும் என்னை நடி­கை­யாக்­கி­யது தமிழ் சினி­மா­தான். 'வெயில்' படத்­திற்கு கிடைத்த வர­வேற்­பில்­தான் இன்று நான் நடி­கை­யாக இருக்­கி­றேன். இடை­யில் தமிழ் படங்­க­ளில் நடிக்­க­வில்லை. கார­ணம், நல்ல கதை­கள் அமை­ய­வில்லை. நடிக்க வேண்­டும் என்­ப­தற்­காக ஏதோ ஒரு படத்­தில் நடிக்க விருப்­பம் இல்லை. அதோடு மலை­யா­ளத்­தில் நல்ல வாய்ப்­பு­கள் அமைந்­த­தால் அங்­கேயே தொடர்ந்து நடித்து வந்­தேன்.

இப்­போது இரண்டு தமிழ் படங்­க­ளில் நடிக்க ஒப்­பந்­த­மா­கி­யி­ருக்­கி­றேன். அதில் ஒரு படம்­தான் 'தீயோர்க்கு அஞ்­சேல்.' இன்­றைய கால­கட்­டத்­தில் ஒரு பெண் எவ்­வ­ளவு விழிப்­பு­ணர்­வு­டன் இருக்க வேண்­டும், துணிச்­ச­லாக இருக்க வேண்­டும் என்­பதை சொல்­கிற படம். ஹீரோ­யின் சப்­ஜெக்ட் படம்.

தமிழ் சினிமா இப்­போது நிறைய மாறி இருக்­கி­றது. இளை­ஞர்­கள் புதிய சிந்­த­னை­யோடு படம் எடுக்க வரு­கி­றார்­கள். தென்­னிந்­திய நடி­கர் சங்­கத்­தில் கூட இளை­ஞர்­கள் பொறுப்­புக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள். மற்ற மாநில சினி­மாக்­க­ளுக்கு உதா­ர­ண­மாக தமிழ் சினிமா வளர்ந்­தி­ருக்­கி­றது. தொடர்ந்து நல்ல கதை­களை தேர்வு செய்து நடிப்­பேன்.''