மீண்டும் தொடக்கம்!

06 டிசம்பர் 2017, 01:28 AM

தனுஷ் -– மேகா ஆகாஷ் நடிப்­பில் உரு­வாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்­தின் படப்­பி­டிப்பு சில கார­ணங்­க­ளால் நிறுத்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து கவு­தம் மேனன் தற்­போது விக்­ரமை வைத்து `துருவ நட்­சத்­தி­ரம்' படத்தை உரு­வாக்கி வரு­கி­றார். தற்­போது விக்­ரம் `சாமி- 2' படத்­தில் பிசி­யாகி இருப்­ப­தால், தான் கிடப்­பில் போட்ட `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்­தின் மீத­முள்ள காட்­சி­களை பட­மாக்க முடிவு செய்து, அதற்­கான பணி­களை தொடங்­கி­யி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது.

டிசம்­ப­ருக்­குள் `எனை நோக்கி பாயும் தோட்டா' படப்­பி­டிப்பை முடித்­து­விட்டு,  பிப்­ர­வ­ரி­யில் வெளி­யிட உள்­ளா­ராம் கவு­தம் மேனன். காதல் கலந்த த்ரில்­லர் கதை­யாக உரு­வாகி இருக்­கும் இந்த படத்தை கவு­தம் மேன­னின் ஒன்­ராகா என்­டர்­டெ­யின்­மெண்ட் மற்­றும் எஸ்­கேப் ஆர்­டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயா­ரித்­துள்­ள­னர். இந்த படத்­திற்கு தர்­புகி சிவா இசை­ய­மைத்­துள்­ளார். ராணா, சுனைனா சிறப்பு தோற்­றத்­தில் நடித்­துள்­ள­னர்.