பாப்புலராவேன் என்று எதிர்பார்க்கவில்லை! –- சாய் பல்­லவி

15 நவம்பர் 2017, 12:34 AM

மலை­யா­ளத்­தில் வெளி­யாகி, ஒட்­டு­மொத்த சினிமா ரசி­கர்­க­ளை­யும் கொள்ளை கொண்ட படம் 'பிரே­மம்'. 'பிரேம'த்தைக் கண்­ட­வர்­கள் மலரை அறி­யா­மல் இருக்­க­மாட்­டார்­கள். மலர் கேரக்­ட­ரில் அப்­ப­டத்­தில் நடித்­தி­ருந்த சாய் பல்­லவி, இப்­போது 'கலி' மலை­யாள படத்­தில் துல்­கர் சல்­மா­னின் மனை­வி­யாக, அஞ்­சலி எனும் கேரக்­ட­ரில் நடித்­தி­ருக்­கி­றார். அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து...

* உங்­களை பற்றி?

நான் அசல் தமிழ்­நாட்டு பொண்ணு. பிறந்­தது ஊட்டி பக்­கத்­தி­லுள்ள கோத்­த­கிரி. படித்­தது, வளர்ந்­தது கோவை­யில். எனக்கு டான்ஸ் மீது கொள்ளை ஆசை. 2008ல் 'உங்­க­ளில் யார் அடுத்த பிர­பு­தேவா' நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி­யுள்­ளேன். தற்­போது நான் ஜார்­ஜி­யா­வில் மருத்­து­வம் படித்து வரு­கி­றேன்.

* சினிமா வாய்ப்பு?

எனக்கே ஆச்­ச­ரி­ய­மா­க­தான் உள்­ளது. 'பிரே­மம்' என்ற ஒரே படத்­தில் நான் இவ்­வ­ளவு பாப்­பு­ல­ரா­வேன் என்று துளி­கூட எதிர்­பார்க்­க­வில்லை. அத்­தனை புக­ழும் இயக்­கு­னர் அல்­போன்ஸ் புத்­தி­ர­னை­தான் போய் சேரும். என்­னு­டைய இரண்­டா­வது படம் 'கலி' கடந்த மார்ச் மாதம் ரிலீ­சா­னது.

* 'பிரேம'த்தில் வரும் டப்­பாங்­குத்து பாட்டு உண்­மை­யா­கவே சூப்­பர்!

 படப்­பி­டிப்­பின்­போது எது­வும் எனக்கு தெரி­ய­வில்லை. நான் சிறந்த டான்­சர் என்று கூற­வில்லை. சொல்­லப்­போ­னால் அந்த ஸ்டைல் எனக்கு வச­தி­யாக இருக்­க­வில்லை. அது இயக்­கு­நர் அல்­போன்ஸ் செய்த மாயம். அவர்­தான் எல்­லா­வற்­றுக்­கும் கார­ணம். எப்­பொ­ழு­துமே நட­னத்­தோடு சேர்ந்த விஷ­யங்­க­ளைச் செய்­யவே ஆசைப்­பட்­டி­ருக்­கி­றேன்.

* உங்­க­ளுக்­கென்று எந்த சினிமா பின்­ன­ணி­யும் இல்லை. ஆனா­லும் திரை­யில் உங்­க­ளின் நடிப்பு இயல்­பாக இருக்­கி­றது. எப்­படி இது?

எனக்கு தெரி­ய­வில்லை. எப்­படி நடிக்க வேண்­டும் என்­று­கூட எனக்கு தெரி­யாது. நிஜ வாழ்க்­கை­யில் மல­ரும், அஞ்­ச­லி­யும் எப்­படி இருப்­பார்­களோ, அதைத்­தான் திரை­யில் பிர­தி­ப­லித்­தேன். மலர் பாத்­தி­ரம் இரக்­க­முள்ள ஓர் ஆசி­ரியை. அஞ்­சலி, கண­வ­னுக்கு உறு­து­ணை­யான மனைவி பாத்­தி­ரம். நிஜத்­தில் இருந்­தி­ருந்­தால் எப்­படி வாழ்ந்­தி­ருப்­பேனோ அதைத்­தான் கதா­பாத்­தி­ர­மாக செய்­தேன். 'பிரேம'த்துக்­குப் பிறகு வந்த சில கதா­பாத்­தி­ரங்­க­ளில் என்னை பார்க்க முடி­யா­த­தால் அவற்­றில் நடிக்க மறுத்­தி­ருக்­கி­றேன்.

* ஒரு நடி­கை­யாக 'பிரேம'த்துக்­கும், 'கலி'க்கும் என்ன வித்­தி­யா­சத்தை உணர்­கி­றீர்­கள்?

'பிரே­மம்' முழுக்க நான் விளை­யாட்டு பிள்­ளை­யா­கவே இருந்­தேன். 'கலி' படத்தை 35 நாட்­க­ளுக்­குள் முடிக்க வேண்­டி­யி­ருந்­தது. படிப்­புக்­காக ஜார்­ஜியா போக வேண்­டி­யி­ருந்­த­தால், அதற்­குள் படத்தை முடிக்க வேண்­டிய கட்­டா­யத்­தில் மொத்த படக்­கு­ழு­வும் இருந்­தது. சில சம­யங்­க­ளில் காலை 9 மணிக்­குத் தொடங்­கும் படப்­பி­டிப்பு, அதி­காலை 3 மணி வரை நீளும், அப்­போ­தெல்­லாம் அதி­கம் உணர்ச்­சி­வ­சப்­ப­டு­வேன். ஆனால் மொத்த குழு­வும் எனக்கு ஆத­ர­வாக இருந்­தது, குறிப்­பாக துல்­கர் சல்­மான்.

* 'கலி' படத்­துக்­காக சொந்­தக்­கு­ர­லில் பேசி இருந்­தீர்­களே எப்­படி?

என்­னால் மலை­யா­ளத்தை புரிந்து கொள்ள முடி­யும். ஆனால் பேசு­வது என்­பது முற்­றி­லும் வேறு அனு­ப­வம் அல்­லவா? சில வச­னங்­க­ளுக்கு நிறைய முறை ரீடேக் போக வேண்­டி­யி­ருந்­தது. ஆனா­லும் எப்­ப­டியோ சமா­ளித்­து­விட்­டேன்.

* உங்­க­ளின் எதிர்­கா­லம் ?

அதைப்­பற்றி இன்­னும் யோசிக்­க­வில்லை. திற­மை­சா­லி­கள் தின­சரி வந்­து­போ­கும் இடம் சினிமா என்­பது எனக்கு தெரி­யும். பார்க்­க­லாம், முத­லில் நான் ஒரு மருத்­து­வர் ஆகி­றேனா என்று!