ஆக் ஷன் கிங்கிற்காக முருகதாஸ்!

15 நவம்பர் 2017, 12:31 AMஅர்­ஜுன் தனது மகள் ஐஸ்­வர்­யாவை வைத்து ‘சொல்லி விடவா’ என்ற படத்தை இயக்கி இருக்­கி­றார். இந்த படத்­தில் சந்­தன் ஜோடி­யாக ஐஸ்­வர்யா நடித்­தி­ருக்­கி­றார்.

சுஹா­சினி, கே. விஸ்­வ­நாத், சதீஷ், யோகி பாபு, அசோக் மந்­தனா, போண்டா மணி, மனோ பாலா, மொட்டை ராஜேந்­தி­ரன் உள்­ளிட்ட பல­ரும் நடித்­தி­ருக்­கும் இந்த படத்தை தனது சொந்த தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ஸ்ரீ சாய் ராம் பிலிம் இன்­டர்­நே­ஷ­னல் மூலம் அர்­ஜுன் தயா­ரித்­தி­ருக்­கி­றார்.

எச்.சி. வேணு­கோ­பால் ஒளிப்­ப­திவு செய்­தி­ருக்­கும் இந்த படத்­திற்கு ஜேசி கிப்ட் இசை­ய­மைத்­தி­ருக்­கி­றார். இந்­நி­லை­யில், `சொல்லி விடவா' படத்­தின் டீசரை சமீ­பத்­தில் ஏ.ஆர். முரு­க­தாஸ் வெளி­யிட்­டி­ருந்­தார். இது பற்றி தனது டுவிட்­டர் பக்­கத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தார் முரு­க­தாஸ்.

தீபா­வ­ளிக்கு ரிலீ­ஸாக இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த இந்த படத்­தின் ரிலீஸ் தேதி சமீ­பத்­தில் தள்­ளி­வைக்­கப்­பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.