‘கதாயுதம்!’

15 நவம்பர் 2017, 12:30 AM


விஜய் சேது­பதி, ஐஸ்­வர்யா ராஜேஷ் நடித்த படம் ‘ரம்மி’. இப்­ப­டத்தை பால­கி­ருஷ்­ணன் இயக்கி இருந்­தார். இவர் அடுத்த படத்­திற்கு ‘கதா­யு­தம்’ என்று பெய­ரிட்­டுள்­ள­னர். இந்த படத்தை ஸ்ரீ வள்ளி ஸ்டூடியோ பட­நி­று­வ­னம் மிக பிரம்­மாண்­ட­மான முறை­யில் தயா­ரிக்­கி­றது. 'ரம்மி' படத்­தின் வெற்­றிக்­குப் பிறகு இந்­நி­று­வ­னம் தயா­ரிக்­கும் படம் இது.

‘ஜோக்­கர்’ படத்­தின் மூலம் சினிமா ரசி­கர்­கள் மத்­தி­யில் பர­ப­ரப்­பான நடி­க­ராக கவ­னிக்­கப்­பட்­ட­வர் குரு­சோ­ம­சுந்­த­ரம். அது­போல், ‘துரு­வங்­கள் 16’ படத்­தின் மூலம் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக வளம் வந்­த­வர் ரகு­மான். இந்த இரு­வ­ரும் ‘கதா­யு­தம்’ படத்­தில் இணைந்து நடிக்­கி­றார்­கள். நாய­கி­யாக ‘இந்­தியா பாகிஸ்­தான்’ படத்­தின் நாயகி சுஷ்மா ராஜ் நடிக்­கி­றார். மற்­றும் காளி வெங்­கட், துளசி, ரமா உள்­ளிட்ட பலர் நடிக்­கி­றார்­கள்.

படத்தை பற்றி இயக்­கு­னர் கூறும்­போது, ''வாழ்க்­கை­யில் ஒவ்­வொ­ருத்­த­ருக்­கும் ஒரு கனவு இருக்­கும். அப்­படி கன­வு­க­ளோடு இருக்­கிற இரண்டு பேர் சந்­திக்­கி­ற­தும், அவங்க கனவு நிறை­வேற போரா­டு­ற­தும்­தான் கதை. படத்­தின் முதல் கட்ட படப்­பி­டிப்பு புதுக்­கோட்­டை­யில் நடை­பெற்­றது. அடுத்­த­கட்ட படப்­பி­டிப்பு சென்னை, பொள்­ளாச்சி, கேரளா போன்ற இடங்­க­ளில் நடை­பெற உள்­ளது'' என்­றார்.