பட இயக்­கு­னர் சப­தம்!

15 நவம்பர் 2017, 12:28 AM

சிம்­புவை வைத்து ‘அன்­பா­ன­வன் அச­ரா­த­வன் அடங்­கா­த­வன்’ என்ற படத்தை இயக்­கி­ய­வர் ஆதிக் ரவிச்­சந்­தி­ரன். இதில் சிம்­பு­வுக்கு ஜோடி­யாக தமன்னா, ஸ்ரேயா நடித்­தி­ருந்­தார்­கள். இப்­ப­டம் இரண்டு பாகங்­க­ளாக வெளி­யா­கும் என்று அறி­விக்­கப்­பட்­டது. முதல் பாகம் வெளி­யாகி ரசி­கர்­க­ளி­டையே சுமா­ரான வர­வேற்பை பெற்­றது.

இரண்­டாம் பாகத்­தின் படப்­பி­டிப்பு 80 சத­வீ­தத்­திற்கு மேல் முடிந்­தும் படம் கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளது. முதல் பாகத்தை விமர்­சித்­தும், இரண்­டாம் பாகம் வருமா, வராதா என்­றும் சிம்பு ரசி­கர்­கள் ஆதிக் ரவிச்­சந்­தி­ர­னி­டம் கேட்டு வரு­கி­றார்­கள். இந்­நி­லை­யில் அவர் சமூக வலை­த­ள­மான டுவிட்­டர் பக்­கத்­தில் 'முது­கில் குத்­தி­ய­வர்­க­ளுக்கு நன்றி' என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்.

மேலும் ‘இந்த உல­கமே உன்னை எதிர்த்­தா­லும் எல்லா சூழ­லி­லும் நீ தோத்­துட்ட தோத்­துட்­டேன்னு உன் முன்­னாடி நின்னு அல­றி­னா­லும், நீயா ஒத்­துக்­குற வரைக்­கும் எவ­னா­லும் எங்­கே­யும், எப்­ப­வும், உன்ன ஜெயிக்க முடி­யாது. நெவர் எவர் கிவ் அப். என் முது­கில் குத்­தி­ய­வர்­க­ளுக்கு நன்றி. நான் மீண்­டும் எழுந்து வரு­வேன்’ என அஜீத்­தின் ‘விவே­கம்’ பட­வ­ச­னத்தை பதிவு செய்­தி­ருக்­கி­றார்.