‘முரட்டுகுத்து’ விறுவிறு படப்பிடிப்பு!

15 நவம்பர் 2017, 12:27 AM

'ஹர ஹர மகா­தே­வகி' படத்தை தொடர்ந்து சந்­தோஷ் பி.ஜெய­கு­மார் இயக்­கும் படம் ‘இருட்டு அறை­யில் முரட்டு குத்து’. ‘ஹர ஹர மகா­தே­வ­கி’­யில் நடித்த கவு­தம் கார்த்­திக்கே இப்­ப­டத்­தி­லும் கதா­நா­ய­கன்! கதா­நா­ய­கி­யாக சந்­தா­னத்­து­டன் ’சர்­வர் சுந்­த­ரம்’, ‘சக்க போடு போடு ராஜா’ ஆகிய படங்­க­ளில் நடிக்­கும் வைபவி சாண்­டில்யா நடிக்­கி­றார். இவர்­க­ளு­டன் சந்­தி­ரிகா ரவி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்­தி­ரன், கரு­ணா­க­ரன், பால சர­வ­ணன், மது­மிதா, ‘மீசையை முறுக்கு’ படப் புகழ் ஷாரா ஆகி­யோ­ரும் நடிக்­கும் இப்­ப­டத்­தின் முதல் கட்ட படப்­பி­டிப்பை தாய்­லாந்­தில் நடத்தி முடித்­து­விட்டு படக்­கு­ழு­வி­னர் சென்னை திரும்­பி ­யுள்­ள­னர். இதனை தொடர்ந்து இப்­போது சென்­னை­யில் ஒரு பாட­லுக்­கான படப்­பி­டிப்பை நடத்தி வரு­கி­றார்­கள். இந்த படப்­பி­டிப்பை தொடர்ந்து இப்­ப­டத்­தின் இறு­தி­கட்ட படப்­பி­டிப்­பிற்­காக படக்­கு­ழு­வி­னர் மீண்­டும் தாய்­லாந்துக்கு செல்­ல­வி­ருக்­கின்­ற­னர்.

‘ஸ்டூடியோ கிரீன்’ கே.ஈ.ஞான­வேல் ராஜா தயா­ரிக்­கும் இப்­ப­டத்­திற்கு பால­மு­ரளி பாலு இசை அமைக்­கி­றார். தருண் பாலாஜி ஒளிப்­ப­திவு செய்­கி­றார். இந்த படத்தை 2018 துவக்­கத்­தில் வெளி­யிட படக்­கு­ழு­வி­னர் முடிவு செய்­துள்­ள­னர்.