நகுல் படத்தில் பாகிஸ்தான் பாடகர்!

15 நவம்பர் 2017, 12:25 AM

நகுல் நடிப்­பில் உரு­வாகி வரும் படம் ‘செய்’. இந்த படத்­தில் இடம்­பெ­றும் ‘இறைவா…’ என்று துவங்­கும் பாடலை பாகிஸ்­தானை சேர்ந்த பாட­க­ரான ஆதிப் அலி பாடி­யுள்­ளார். ஏற்­க­னவே பல பாகிஸ்­தானிய பாடல்­க­ளை­யும், இந்தி பாடல்­க­ளை­யும் பாடி­யுள்ள இவர் ராய் லக்ஷ்மி நடிப்­பில் விரை­வில் வெளி­யா­க­வி­ருக்­கும் ‘ஜூலி- 2’ படத்­தின் இசையமைப்­பா­ளர்­க­ளில் ஒரு­வர் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

ஒரு பாகிஸ்­தான் பாட­கர் தமி­ழில் பாடி அறி­மு­க­மா­வது இது­தான் முதல் முறை என்­கின்­ற­னர் ‘செய்’ படக்­கு­ழு­வி­னர். ‘இறைவா…’ பாடலை ஆதிப் அலி­யு­டன் இணைந்து இந்­துஸ்­தானி பாட­க­ரான சப்­தஸ்­வரா ரிஷி­யும் பாடி­யுள்­ளார். நிக்ஸ் லோபஸ் இசையமைப்­பில் உரு­வா­கி­யுள்ள இப்­பா­டலை யுக­பா­ரதி எழு­தி­யுள்­ளார். மேலும் ‘செய்’ படத்­தில் பிர­பல பாட­கர்­க­ளான சங்­கர் மகா­தே­வன், சோனு நிகாம், ஸ்ரேயா கோஷல், பென்னி தயாள் ஆகி­யோ­ரு­டன் அறி­முக பாட­கி­யான கீதாஞ்­ச­லி­யும் ஒரு பாடலை பாடி­யுள்­ளார்.

‘டிரிப்பி டர்ட்­டில் புரொ­ட­க்க்ஷன்ஸ்’ நிறு­வ­னம் சார்­பில் இப்­ப­டத்தை மனு மற்­றும் உமேஷ் இணைந்து தயா­ரித்­துள்­ளார்­கள். இந்த படம் டிசம்­பர் 8-ம் தேதி வெளி­யா­கும் என்று படக்­கு­ழு­வி­னர் தெரி­வித்­துள்­ளார்­கள்.