ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 15–11–17

14 நவம்பர் 2017, 10:51 PM

இளையராஜா மீது அசாத்திய நம்பிக்கை!

(சென்ற வார தொடர்ச்சி...)

சத்யா மூவீஸ் தயா­ரிப்­பில் அப்­போ­தைய அமைச்­சர், ஆர்.எம். வீரப்­பன் தயா­ரித்த படம் 'காக்­கிச்­சட்டை.' இப்­ப­டத்­தின் பாடல் கம்­போ­ஸிங்­கிற்­காக இளை­ய­ராஜா, இயக்­கு­னர் ராஜ­சே­கர் உத­விக்கு மூன்று பேர் முது­ம­லைக்கு சென்­றி­ருக்­கி­றார்­கள்.

பாடல்­க­ளின் டியூன்­களை ஒரே நாளில் போட்டு முடித்­துள்­ளார் இளை­ய­ராஜா. ஒரு வாரம் என்று திட்­ட­மிட்டு வந்­துள்­ளார் இயக்­கு­னர் ராஜ­சே­கர். ஆனால், இவ்­வ­ளவு சீக்­கி­ரம் முடிந்­ததை அவர் எதிர்­பார்க்­க­வில்லை, அப்­போது இளை­ய­ராஜா வெறு­மனே வாசித்­துக் கொண்­டி­ருக்­கும் போது எந்­த­வித தங்கு தடை­யு­மின்றி ஆறு டியூன்­கள் வந்­துள்­ளன. உடனே ராஜ­சே­கர் மூன்­றா­வது டியூனை படத்­திற்கு பயன்­ப­டுத்தி கொள்­கி­றேன் என்­ற­தும் இளை­ய­ராஜா கொடுக்க மறுத்து விட்­டார்.

அப்­ப­டியே இந்த ஆறு டியூ­னை­யும் ஒரே படத்­திற்கு எடுத்து கொண்­டால் தரு­கி­றேன் என்று திட்­ட­வட்­ட­மாக சொல்லி இருக்­கி­றார்.

சென்னை வந்­த­தும் ஒரு நாள் ராஜா­வி­டம் பஞ்சு அரு­ணா­ச­லம் வந்து, ''ராஜா, உன் கம்­போ­ஸிங் கேஸட்டை கொடு. அதில் டியூன் ஏதா­வது இருந்­தால், அவ­ச­ர­மாக படப்­பி­டிப்­பிற்கு ஒரு பாடல் தேவைப்­ப­டு­கி­றது. தேவை­யான பாட்டை பதிவு செய்து அனுப்­ப­லாம்'' என்று கேட்­டுள்­ளார். (இளை­ய­ரா­ஜா­வி­டம் இவ்­வ­ளவு உரிமை எடுத்து கேட்­ப­வர் பஞ்சு அரு­ணா­ச­லம் மட்­டும்­தான் இருந்­தார்.)

அதற்கு உடனே இளை­ய­ராஜா ''அண்ணே! அந்த ஆறு பாடல்­க­ளை­யும் அப்­ப­டியே தரு­கி­றேன். அதற்­கேற்­ற­வாறு கதை ரெடி பண்­ணுங்க'' கண்­டிப்­பாக அந்த படம் அந்த ஆறு பாடல்­க­ளுக்­காக நிச்­ச­யம் ஓடும்'' என்­றார். இளை­ய­ரா­ஜா­வின் உறுதி மீது பஞ்­சு­விற்கு அசாத்­திய நம்­பிக்கை உண்டு. உடனே அந்த ஆறு பாடல்­க­ளை­யும் வாங்கி ஒரு படம் எடுத்­தார். அது சூப்­பர் டூப்­பர் ஹிட்­டாக ஓடி­யது. அத்­தி­ரைப்­ப­டம்­தான் 'வைதேகி காத்­தி­ருந்­தாள்.'

'புவனா ஒரு கேள்­விக்­குறி' படத்­தின் திரைக்­கதை, வச­னம், பாடல்­களை பஞ்சு அரு­ணா­ச­லம் எழு­தி­யி­ருந்­தார். அதில் ரஜினி பாடு­வது போல் வரும் 'ராஜா என்­பார் மந்­திரி என்­பார்' பாடலை முதன் முத­லில் திரை­யில் ரஜி­னிக்­காக இளை­ய­ரா­ஜாவை பாட சொன்­ன­வர் பஞ்சு. பாடல் ரிக்­கார்­டிங் ஆகி­விட்­டது. கேட்டு பார்த்த ராஜா, ''நான் பாடிய இந்த பாடல் வேண்­டாம். எஸ்.பி.பி.யை வைத்து பாடி ரிக்­கார்­டிங் செய்து விட­லாம்'' என்­றார். நீங்­கள் பாடி­யதே நன்­றாக இருக்­கி­றது, அப்­ப­டியே இருக்­கட்­டும் என்று பஞ்சு சொல்­லி­யும், இளை­ய­ராஜா மறுத்து எஸ்.பி.பி.யை வைத்து பதிவு செய்­தார்.

அதே­போல், இளை­ய­ரா­ஜாவே சிறப்­பாக பாடல் எழு­து­வார். அந்த சம்­ப­வத்தை அவரே கூறி­யுள்­ளார்.

''பொது­வாக பாடல் எழு­து­வ­தில் எனக்கு ஆர்­வம் கிடை­யாது. ஏனென்­றால் கவி­ஞர் கண்­ண­தா­ச­னும், வாலி­யா­ரும், பஞ்சு அண்­ண­னும் நல்ல பாடல்­கள் எழு­து­வ­தற்­காக இருந்­த­தால், நான் டியூன் போடும் போது ஓரிரு வார்த்­தை­க­ளோடு தொடங்கி வைப்­பேன். அதுவே சில நேரங்­க­ளில் பல்­ல­வி­யாக அமைந்­து­வி­டும்.

நான் பாடல் எழு­திய ஒரு சம்­ப­வம் இருக்­கி­றது. ஒரு சம­யம் கோவைத்­தம்­பி­யின் 'இத­யக்­கோ­யில்' படத்­திற்­காக ஒரு பாடலை எம்.ஜி. வல்­ல­பன் எழு­தி­னார். நான் வேறு மாதிரி அந்த பாட­லின் சூழ்­நிலை இருக்­கி­றது, அத­னால் கதா­நா­ய­கியை பார்த்து பாடல் பாடு­வது போல் தெரி­யக்­கூ­டாது. ஆனால் படம் பார்ப்­ப­வர்­க­ளுக்­கும் கதா­நா­ய­கிக்­கும் மட்­டுமே அது அவ­ளுக்­காக பாடும் பாட­லாக தோன்ற வேண்­டும். சுருக்­க­மாக சொன்­னால் தேவி­யையோ, தெய்­வத்­தையோ பற்றி பாடு­வது போல் இருக்க வேண்­டும் என சொல்­லி­யும் பாடல் சரி­யாக வரா­த­தால், நானே எழுத வேண்­டி­ய­தாகி விட்­டது. அந்த பாடல்­தான் 'இத­யம் ஒரு கோவில், அதில் உத­யம் ஒரு பாடல், இதில் வாழும் தேவி நீ...' இப்­ப­டித்­தான் நான் பாட்­டெ­ழு­தி­னேன்'' என்­றார்.