நடிப்புதான் என் சந்தோஷம்! –- ஈதன் குரி­ய­கோஸ்

08 நவம்பர் 2017, 01:28 AM

'இருக்கு ஆனா இல்ல' படத்­தின் மூலம் நாய­கி­யாக அறி­மு­க­மா­ன­வர்­தான் ஈதன் குரி­ய­கோஸ். தற்­போது 'நச்', 'இனி வரும் நாட்­கள்' படங்­க­ளில் நடித்து கொண்­டி­ருக்­கி­றார். எதைக் கேட்­டா­லும் என் மம்­மி­யைக் கேளுங்க என சொல்­லும் ஹீரோ­யின்­க­ளுக்கு மத்­தி­யில், எந்த கேள்வி கேட்­டா­லும் சொந்­த­மாக பதில் சொல்­கி­றார். தமி­ழில் மிகத் தெளி­வா­கப் பேசு­கி­றார். கோயம்­புத்­தூ­ரில் பி.எஸ்சி., காட்சி ஊட­க­வி­ய­லும், டில்லி பல்­க­லைக்­க­ழ­கத்­தில் முது­கலை ஊடக நிர்­வா­க­வி­ய­லும் பயின்று உள்­ளார்.இவரை சந்­தித்­த­போது...

* உங்­களை போன்ற மெத்­தப் படித்த ஹீரோ­யின்­க­ளைப் பார்ப்­பது மிக அரி­தாக உள்­ளதே?

கல்வி, மனி­த­னா­கப் பிறந்த அனை­வ­ருக்­குமே மிக­வும் முக்­கி­ய­மா­ன­தொன்று. பால் சமத்­து­வம், சம உரிமை என்­ப­தெல்­லாம் கல்­வி­யால் மட்­டுமே கிடைக்­கும் என நம்­பு­கி­றேன். சினி­மா­வுக்கு வர விரும்­பும் இளம் பெண்­க­ளுக்கு எனது ஆலோ­சனை என்­ன­வென்­றால், முதல்ல படிங்க, அப்­பு­றம் நடிக்க வாங்க ப்ளீஸ்.

* நல்ல விஷ­யம்­தான். நடிக்­கும் ஆசை எப்­படி வந்­தது?

 சிறு­வ­யது முதலே நடிப்­பு­தான் எனக்கு மகிழ்ச்­சியை கொடுத்­தது. நடிக்­கும் போது­தான் நான் சந்­தோ­ஷ­மாக இருந்­தேன். அத­னால்­தான் நான் விரும்­பிய கல்­வியை முடித்­த­வு­டன் நடிக்க வந்­து­விட்­டேன்.

* நடித்த படங்­கள், நடித்­துக் கொண்­டி­ருக்­கும் படங்­கள்...?

'நச்', ‘இனி வரும் நாட்­கள்’, 'ஏண்டா தலை­யில எண்­ணெய் வைக்­கல' என மூன்று படங்­கள் நடித்­துள்­ளேன். மேலும், பெய­ரி­டப்­ப­டாத இரண்டு படங்­க­ளில் நடித்து வரு­கி­றேன்.

* மலை­யா­ளி­யான நீங்­கள், இன்­னும் மலை­யா­ளப் படத்­தில் நடிக்­க­வில்­லையே?

மலை­யா­ளி­யாக இருந்­தா­லும் நான் பல வரு­டங்­க­ளாக தமிழ்­நாட்­டில்­தான் வசித்து வரு­கி­றேன். ஆனா­லும் நான் மலை­யா­ளத்­தில் 'காட்டு மகன்' என்ற படத்­தில் நடித்­தி­ருந்­தேன். அது கடந்த ஆண்டு ரிலீ­ஸாகி இருந்­தது.

* எதிர்­கால லட்­சி­யம்?

 தேசிய விருது  நடிகை என பெயர் வாங்க வேண்­டும்!