கணவர் தந்த சிறந்த பரிசு! –- சமந்தா

03 நவம்பர் 2017, 09:04 PM

‘சமந்தா அக்­கி­நேனி’ என  பெயர் மாற்­றிக் கொண்­டி­ருக்­கும் இந்த புது­ம­ணப் பெண், சமந்தா. தலை தீபா­வளி கொண்­டா­டிய மகிழ்ச்­சி­யி­லி­ருந்த அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து...

* கண­வர் நாக சைதன்யா ?

திரு­ம­ணத்­துக்கு பிறகு நான் நடிப்பை நிறுத்தி விடு­வேன் என்று நாக சைதன்யா மிகுந்த கவ­லை­யாக இருந்­தார். தமிழ், தெலுங்கு சினி­மா­வில்  திரு­ம­ணம் ஆன பெண்­க­ளுக்கு நில­வும் பாது­காப்­பற்ற தன்­மையை நான் நீக்க வேண்­டும். திரு­ம­ணத்­துக்­குப் பிறகு முன்­பை­விட பிஸி­யாக நான் நடிப்­பதை இந்த உல­கம் பார்க்க வேண்­டும் என சைதன்யா விரும்­பி­னார். அவர் எனக்­குத் தந்­தி­ருக்­கும் சிறந்த பரிசு.

* திரு­ம­ணத்­துக்கு மிக­வும் நெருக்­க­மான உற­வி­னர்­களை மட்­டும் கூப்­பிட்­டது ஏன்?

எனது திரு­ம­ணம் எளி­மை­யான முறை­யில் நடை­பெற வேண்­டும் என்ற எண்­ணத்­தில்­தான் இருந்­தேன். நாக சைதன்­யா­வும் அதையே விரும்­பி­னார். இரு­வ­ரது குடும்­பத்­தி­ன­ரும் சேர்ந்தே 200 நபர்­கள் இருந்­தார்­கள். குறைந்த நபர்­களை மட்­டுமே அழைத்து, அவர்­கள் அனை­வ­ரும் சிரித்­துக் கொண்­டாடி மகிழ்­வ­தைக் காண வேண்­டும் என்­பது எங்­க­ளது இரு­வ­ரின் ஆசை­யாக இருந்­தது. அப்­போ­து­தான் வந்­தி­ருக்­கும் ஒவ்­வொ­ரு­வ­ருமே என்ன நினைக்­கி­றார்­கள் என்­பது தெரி­ய­வ­ரும். ஆயி­ரக்­க­ணக்­கில் அழைத்­தி­ருந்­தால் ‘ஹாய்’ என்ற ஒற்­றைச் சொல்­லு­டன் முடிந்­தி­ருக்­கும்.

* தொடர்ந்து படங்­க­ளுக்கு கொடுத்­துள்ள கால்­ஷீட்­டு­கள், தொண்டு நிறு­வ­னம், சமூக சேவை.. இவ்­வ­ளவு பிசி­யில் திரு­மண நிகழ்­வு­களை எப்­படி சமா­ளித்­தீர்­கள்?

திரு­ம­ணம் நெருங்கி விட்­டது, இன்­னும் பணி­யாற்­றிக்­கொண்­டே­தான் இருப்­பாயா என்று நண்­பர்­கள் கிண்­டல் செய்­தார்­கள். ஏதா­வது ஒரு விஷ­யம் செய்­தால்­கூட, இன்­னும் புதி­தாக செய்ய வேண்­டும், நம்மை நிரூ­பிக்க வேண்­டும் என நினைத்­துக்­கொண்டே இருப்­பேன். அத­னால் மட்­டுமே இன்­னும் ஓடிக்­கொண்டே இருக்­கி­றேன்.

ஒரு வெற்றி கிடைத்து விட்­டது. கொஞ்ச நாள் ஓய்­வெ­டுக்­க­லாம் என்ற நினைப்பு வந்­ததே இல்லை. திரு­மண வாழ்க்­கை­யும் என் வேகத்­தைத் தடுக்­காது. பணம் மட்­டுமே பிர­தா­னம் என்­ப­தற்­காக நடிக்­க­வில்லை. நமது திற­மையை இன்­னும் மேம்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என நினைத்­துத்­தான் பணி­யாற்றி வரு­கி­றேன். எப்­போ­துமே யதார்த்­த­மாக இருக்க வேண்­டும் என நினைப்­பேன். 24 மணி நேரத்­தில் என்­னால் செய்ய முடிந்த கொஞ்ச விஷ­யங்­க­ளைச் செய்­கி­றேன். நடிப்­புத் துறை­யில் கடி­ன­மாக உழைப்­ப­து­தான் மகிழ்ச்­சி­யை­யும் மன­நி­றை­வை­யும் தரு­கின்­றன.

* திரு­ம­ணத்­துக்­குப் பிறகு பழைய மாதிரி அனைத்து வேடங்­க­ளி­லும் நடிக்க முடி­யும் என நினைக்­கி­றீர்­களா?

திரு­ம­ண­மாகி விட்­டா­லும் எனது திரை­யு­லக வாழ்­வில் எந்­த­வொரு மாற்­ற­மும் நிக­ழாது. படங்­க­ளின் தேர்­வைப் பொறுத்­த­வரை, நானே நிறைய மாறி­யி­ருக்­கி­றேன். நடிப்­பில் 8 ஆண்­டு­க­ளைக் கடந்­தி­ருப்­ப­தால் வித்­தி­யா­ச­மான கேரக்­டர்­க­ளில் நடிக்க விருப்­பப்­ப­டு­கி­றேன். மிக­வும் சவா­லான கேரக்­டர்­க­ளில் நடிக்க ஆசை. ஒரே வித­மான கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடிப்­ப­தால் போர­டிக்­கி­றது.

* 'சூப்­பர் டீலக்ஸ்?'

'ஆரண்ய காண்­டம்' இயக்­கு­னர் தியா­க­ராஜா குமா­ர­ராஜா இயக்­கி­யுள்ள படம் 'சூப்­பர் டீலக்ஸ்.' சினிமா மீதான காத­லுக்­காக நான் நடித்­தி­ருக்­கும் படம். இப்­ப­டம் எவ்­வ­ளவு பெரிய வெற்­றி­ய­டை­யும், எவ்­வ­ளவு வசூல் கிடைக்­கும் என்ற எண்­ண­மில்­லா­மல் தைரி­ய­மாக இயக்­கு­னர் கதையை எழு­தி­யுள்­ளார். கண்­டிப்­பாக இந்த எண்­ணத்­துக்­கா­கவே இயக்­கு­ன­ரைப் பாராட்ட வேண்­டும். விஜய் சேது­பதி, பகத் பாசில் நாங்­கள் அனை­வ­ருமே பணத்­தைப் பெரி­தாக மதிக்­கா­மல் இயக்­கு­ந­ருக்­காக நடித்­தி­ருக்­கி­றோம்.