நான் பார்க்கமாட்டேன்!

13 அக்டோபர் 2017, 01:06 AM

சித்­தார்த் நடிப்­பில் தற்­போது உரு­வாகி இருக்­கும் படம் 'அவள்'. இதில் சித்­தார்த்­துக்கு ஜோடி­யாக ஆண்ட்­ரியா நடித்­துள்­ளார். மேலும் சுரேஷ், அதுல் குல்­கர்னி, அனிஷா விக்­டர் உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ளார்­கள். 'ஜில் ஜங் ஜக்' படத்­தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை தயா­ரித்து நாய­க­னாக நடித்­தி­ருக்­கி­றார் சித்­தார்த்.

'அவள்' என பெய­ரிட்­டுள்ள இப்­ப­டத்தை தமிழ், தெலுங்கு மற்­றும் இந்தி என 3 மொழி­க­ளி­லும் தயா­ரா­கி­யுள்­ளது. முழுக்க த்ரில்­லர் பாணி­யில் இப்­ப­டத்தை மிலிந்த் இயக்­கி­யுள்­ளார். இப்­ப­டத்­தின் டிரெய்­லர் வெளி­யிட்டு விழா சமீ­பத்­தில் சென்­னை­யில் நடை­பெற்­றது. இதில் சித்­தார்த், ஆண்ட்­ரியா, அதுல் குல்­கர்னி உள்­ளிட்ட படக்­கு­ழு­வி­னர் கலந்து கொண்­ட­னர். இதில் ஆண்ட்­ரியா பேசும்­போது, ''வித்­தி­யா­ச­மான கதை­கள் என்னை தேடித்­தேடி வரு­கி­ன்றன. கொஞ்­சம் வருத்­த­மா­க­வும் இருந்­தது. இருந்­தா­லும் பல விஷ­யங்­களை கற்­றுக் கொண்டு வரு­கி­றேன். இந்த படத்­தில் என்னை நடிக்க வைத்த இயக்­கு­னர் மிலிந்த் மற்­றும் சித்­தார்த்­துக்கு நன்றி. இந்த படத்தை நானே பார்க்கமாட்­டேன். இது போன்று படங்­களை பார்க்க எனக்கு ரொம்ப பயம். ஆனால், இந்த படத்தை ரொம்ப பயப்­ப­டு­ம­ள­விற்கு எடுத்­தி­ருக்­கி­றார்­கள். கோலி­வுட்­டில் இந்த மாதிரி படம் வந்­த­தில்லை. டெக்­னிக்­கல் அள­வில் இப்­ப­டம் சிறப்­பாக வந்­தி­ருக்­கி­றது'' என்­றார்.