கஸ்தூரி கிண்டல்!

13 அக்டோபர் 2017, 01:02 AM

நடிகை கஸ்­துா­ரிக்கு பெரி­தாக சினிமா வாய்ப்­பு­கள் இல்லை. ஆனா­லும் அவ்­வப்­போது ஏதா­வது கருத்­துக்­களை கூறி தன்னை லைம்லைட்­டி­லேயே வைத்­துக் கொள்­வார். இப்­போ­தும் அப்­படி ஒரு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.

நடிகை சமந்தா, நாக­ சை­தன்­யாவை திரு­ம­ணம் செய்து கொண்­டார். இந்த நிகழ்­வில் ஒரு பத்­தி­ரி­கை­யா­ளர் அவ­ரி­டம் "திரு­ம­ணத்­துக்கு பிற­கும் சினி­மா­வில் நடிப்­பீர்­களா?" என்று கேட்­டுள்­ளார். அதற்கு சமந்தா நடிப்­பேன் என்று பதி­ல­ளித்­துள்­ளார். இது குறித்து தனது டுவிட்­ட­ரில் குறிப்­பிட்­டுள்ள கஸ்­துாரி "திரு­ம­ணத்­திற்கு பிறகு நடிப்­பீர்­களா என்று சமந்­தா­வி­டம் கேட்­ப­வர்­கள், ஏன் அதே கேள்­வியை நாக சைதன்­யா­வி­டம் கேட்­ப­தில்லை?" என்று கேட்­டி­ருந்­தார். அவ்­வ­ள­வு­தான் நெட்­டி­சன்­கள் கஸ்­துா­ரியை போட்டு தாக்கி விட்­டார்­கள். "உங்­க­ளு­டன் நடித்த ரஜி­னி­யும், கம­லும் இன்­னும் ஹீரோ­வாக நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். உங்­க­ளால் முடி­ய­வில்­லையே ஏன்? என்று ஒரு­வர் கேட்க, அதற்கு கஸ்­தூரி, "நானும் அதைத்­தான் ஏன் என்று கேட்­கி­றேன். தாத்­தாக்­கள் ஹீரோக்­க­ளாக நடிப்­பதை ஏற்­றுக் கொள்­ளும் நீங்­கள், திரு­ம­ண­மான பெண்­களை ஹீரோ­யி­னாக நடிப்­பதை ஏற்­றுக் கொள்­வ­தில்­லையே ஏன்?" என்று கேட்­டி­ருக்­கி­றார். கஸ்­துாரி யாரை குறிப்­பி­டு­கி­றார்? விவா­தங்­கள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.