யோகா பயிற்சியில் சிருஷ்டி!

11 அக்டோபர் 2017, 01:05 AM

‘காதலாகி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. தொடர்ந்து ‘டார்லிங்’, ‘தர்மதுரை’ உட்பட பல படங்களில் நடித்தார். தற்போது ‘பொட்டு’, ‘காலக்கூத்து’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்தி நடிகைகள் அவ்வப்போது தங்கள் கவர்ச்சி படங்களை இணையதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். மும்பையை சேர்ந்த சிருஷ்டி டாங்கேயும் இப்போது அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார்.

சிருஷ்டி டாங்கே யோகா பயிற்சி செய்தபோது எடுத்த விதவிதமான புகைப்படங்களை, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் உட்கார்ந்து இருப்பது குனிந்து நிற்பது என்று பல்வேறு படங்கள் உள்ளன.

இதில் ஒரு படம் சிருஷ்டி டாங்கே படுத்துக்கொண்டிருப்பது போல இருக்கிறது. இதை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர். ரசிகர்கள் ஒருவர், ‘உங்களை திரையரங்கில் பார்க்க தவம் இருக்கிறோம். நீங்க எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே... சீக்கிரம் வந்து தரிசனம் கொடுங்கள்’ என்று கூறியுள்ளார். ‘எழில் கொஞ்சும் முகத்தில் குழி மிஞ்சும் கன்னம்’ என்பது உட்பட பல்வேறு விதமாக ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.