டைரக் ஷன் பக்கம் போகமாட்டேன்! –- ஏ.ஆர். ரஹ்­மான்

12 செப்டம்பர் 2017, 11:06 PMதன் திரை­யு­லக பய­ணத்­தில் சில்­வர் ஜூபி­ளி­யைக் கொண்­டா­டு­கி­றார் இசைப்­பு­யல் ஏ.ஆர். ரஹ்­மான். இசை­யைத் தாண்டி, இப்­போது படத் தயா­ரிப்­பா­ளர், ஸ்கிரிப்ட்­ரைட்­டர், இயக்­கு­நர் என அடுத்­த­டுத்த பரி­மா­ணங்­க­ளில் மிளிர ரெடி­யாகி விட்­டார் ஆஸ்­கார் நாய­கன். அமெ­ரிக்­கா­வில் பதி­னெட்டு நக­ரங்­க­ளில் மேற்­கொண்ட இசை சுற்­றுப்­ப­ய­ணத்தை இப்­போது ‘ஒன் ஹார்ட்’ என்ற பெய­ரில் பட­மா­கக் கொண்டு வந்­தி­ருக்­கி­றார்.

கோடம்­பாக்­கத்­தில் உள்ள அவ­ரது ஸ்டூடி­யோ­விற்கு சென்­றால், இரவு பதி­னோரு மணி சந்­திப்­பி­லும் படு பிரஷ்­ஷாக புன்­ன­கைக்­கி­றார். ‘‘சினி­மா­விற்கு வந்து 25 வரு­ஷங்­க­ளாச்சு. இந்த டிரா­வல் சந்­தோ­ஷமா இருக்கு. ‘ஒன் ஹார்ட்’, ‘லீ மஸ்க்’,  ‘99 சாங்க்ஸ்’ மாதிரி நிறைய புது முயற்­சி­கள் பண்­ணிக்­கிட்டே இருக்­க­ணும். எல்­லாமே இசை சார்ந்து இருக்­க­ணும். இப்ப ஜனங்க மன­சிேல ரஹ்­மானா, டாப் த்ரீ-க்­குள்ளே வந்­தி­ட­றேன்.

ஆனா, மூவி மேக்­கிங்­குல எப்­ப­வுமே இயக்­கு­நர்­க­ளுக்­குத்­தான் முத­லி­டம். அடுத்து நடி­கர், நடிகை, தயா­ரிப்­பா­ளர்ன்னு லிஸ்ட் நீண்டு, இசை­ய­மைப்­பா­ள­ருக்கு ஆறா­வது இடத்­துக்கு போயி­டுது. அதே மாதிரி மக்­க­ளும் என்­னோட சில பாடல்­களை கேட்­டுட்டு, ‘ரஹ்­மான் ஏன் இப்­படி பண்­ணி­னாரு?’ என்று கமென்ட் பண்­றதை கேட்க முடி­யுது. இயக்­கு­நர்­கள் கேட்­டாங்க. நான் பண்­ணிக் கொடுத்­தேன்.

இது மாதி­ரி­யான தர்­ம­சங்­க­டங்­களை தவிர்க்­க­ணும்னா நாமே சொந்­தமா படங்­கள் தயா­ரிக்­க­ணும். இந்த ஆசை இருக்கு. குறிப்பா, மியூ­சிக்­கல் ஸ்கிரிப்ட் பண்­ண­ணும். பட், டைரக்­க்ஷன் பண்ற ஆசை இல்ல. அதுல கால் வச்சா படத்தை முடிச்சு கொண்டு வர குறைஞ்­சது ரெண்டு வரு­ஷ­மா­வது ஆயி­டும். ஸோ, அந்த பக்­கம் போறது கொஞ்­சம் ரிஸ்க். ‘அப்­பு­றம் ஏன் ‘லீ மஸ்க்’ படத்தை டைரக்ட் பண்­றீங்க?’ன்னு கேட்­டு­டா­தீங்க.

அது ஒரு ஆக்­ஸி­டண்ட். ‘லீ மஸ்க்’கை இயக்க முதல்ல ஒப்­புக்­கொண்ட இயக்­கு­ந­ருக்கு வேற இடத்­திேல பணி வந்­தி­ருக்­குன்னு இதை அப்­ப­டியே விட்­டுட்டு போயிட்­டார். இது ஒரு வெர்ச்­சு­வல் ரியா­லிட்டி மூவி. புது டெக்­னா­லஜி. இன்­னொரு டைரக்­டரை தேடிப்­பி­டிச்சு, அவ­ருக்கு இந்த டெக்­னா­லஜி மேக்­கிங்கை கத்து கொடுத்து படத்தை முடிக்­க­ணும்னா டைம் ரொம்ப ஆகும்.

அத­னா­ல­தான் நானே டைரக்ட் பண்ண ஆரம்­பிச்­சேன். நிச்­ச­யமா ‘லீ மஸ்க்’ நமக்­கெல்­லாம் புது அனு­ப­வத்­தைக் கொடுக்­கும். நார்­மல் தியேட்­டர்ல அதை ரிலீஸ் பண்ண முடி­யாது. ஏன்னா, அதுக்­கான சீட் அரேன்ஜ்­மென்ட்ஸ், எக்­யூப்­மென்ட் எல்­லாமே வித்­தி­யா­சமா இருக்­க­ணும். ஒரே வார்த்­தை­யிலே சொல்­ல­ணும்னா, இது வேற லெவல் முயற்சி.  

* ‘ஒன் ஹார்ட்’ படம் என்ன கான்­செப்ட்?

சின்ன வய­சு­லேர்ந்து மியூ­சிக்­கல் கான்­சர்ட் தொடர்­பான வெஸ்­டர்ன் டாக்­கு­மென்ட்­ரீஸை தொடர்ந்து பார்த்­துட்டு வரேன். அதிேல ‘டாமி’ன்னு ஒரு படம். இன்­னும் நினை­விேல இருக்கு. மைக்­கேல் ஜாக்­ச­னோட ‘திஸ் இஸ் இட்’ கூட அப்­ப­டி­யான ஒரு படம்­தான். பொதுவா, மியூ­சிக் ஜர்னி படங்­கள்ல லைவ் சவுண்ட்ஸ், பார் கே குவா­லிட்­டி­யோட அசத்­தும். அதே தரத்­தோடு நாமும் முயற்சி செய்­ய­லா­மேன்னு ‘ஒன் ஹார்ட்’டை உரு­வாக்கி இருக்­கோம்.

அமெ­ரிக்க  டூர்ல பார்த்த விஷ­யங்­கள் சக­ல­ரது எனர்­ஜி­யை­யும் பிர­மிக்க வச்­சது. இசை ரசி­கர்­க­ளின் அன்­பும், இளை­ஞர்­க­ளின் ஈடு­பா­டும் இன்­னும் அஞ்சு வரு­ஷங்­கள் கழிச்சு எப்­படி இருக்­கும்னு யோசிச்­சேன். அப்போ ரசனை மாறி­யி­ருக்­க­லாம். வேற வேற ரச­னை­கள் பூத்­தி­ருக்­க­லாம். திரும்பி வராத இந்த கணத்தை ஆவ­ணப்­ப­டுத்­த­ணும்னு தோணுச்சு. அமெ­ரிக்­கா­விலே 18 நக­ரங்­கள்ல கான்­சர்ட் நடந்­தது.

பத்­தா­வது கான்­சர்ட் நடக்­கும் போதே என் ஷோ டைரக்­டர்­கிட்ட ‘கேம­ராக்­கள் அரேஞ்ச் பண்­ணி­டுங்க. இதை டாக்­கு­மென்ட்­ரியா எடுக்­க­லாம்’ன்னு சொன்­னேன். அப்ப நாங்க டெக்­சாஸ்ல இருந்­தோம். ‘ஒன் ஹார்ட்’ பய­ணம் அங்­கி­ருந்தே தொடங்­கி­டுச்சு. அந்த ஷோ தயா­ரிப்­பா­ளர் கரன்­குரோ எனக்கு ஒரு ஐடியா சொன்­னார். ‘நலிந்த இசைக்­க­லை­ஞர்­கள் பவுண்­டே­ஷ­னுக்கு உத­வ­ணும்னு சொல்­லி­யி­ருந்­தீங்­களே... இதை டாக்­கு­மென்ட்­ரியா பண்­ணாம படமா எடுத்தா, பவுண்­டே­ஷ­னுக்கு உதவ முடி­யு­மே’ன்னு சொன்­னார்.

எனக்­கும் அது சரியா பட்­டுச்சு. கான்­சர்ட் எல்­லாம் மொத்­தமா ஷூட் பண்ணி முடிச்­சிட்டு, எடிட் ஷூட்ல பார்த்தா, அது மூணு மணி­நேர படமா விரிஞ்­சது. அதிலே சில இடங்­கள்ல எனக்கு திருப்­தி­யில்லே. மறு­ப­டி­யும் அந்த இடங்­க­ளுக்­குப் போய் ரீ – ஷூட் பண்­ணி­னோம். சமீ­பத்­திலே ெபர்­ச­னல் டிரிப்பா செஷல்ஸ் தீவு­க­ளுக்கு போயி­ருந்­தேன். அந்த புட்­டே­ஜை­யும் படத்­திேல சேர்த்­தி­ருக்­கோம். இப்ப ‘ஒன் ஹார்ட்’ அழ­கான இசை படமா வந்­தி­ருக்கு. மொத்­தம் பதி­னாறு பாடல்­கள்.

நம்ம சிங்­கர்­ஸும் பாடி­யி­ருக்­காங்க. சில பாடல்­கள் முழுசா இருக்­காது. ஆனா, அந்த பாட்­டோட இன்ட்­ரஸ்ட்­டிங் போர்­ஷன்ஸ் கண்­டிப்பா இருக்­கும்.

* 'சங்­க­மித்ரா' அறி­முக விழா கேன்ஸ்ல நடந்­தது பற்றி?

‘சங்­க­மித்ரா’ இன்ட்­ரஸ்ட்­டிங் சப்­ஜெக்ட். ஒரு போர்­ஷன் ஸ்கிரிப்ட்­டு­தான் கேட்­டி­ருக்­கேன். நிச்­ச­யம் அந்த படம் தமிழ் சினி­மாவை வேற லெவ­லுக்கு கொண்டு போகும்.

* புது மியூ­சிக் டைரக்­டர்­கள் உங்க இடத்தை பிடிக்­க­ணும்னு குறியா இருக்­காங்­களே?

இது நல்ல விஷ­யம்­தான். தரம் குறை­யாம, இசைக்கு மேலும் கான்ட்­ரி­பி­யூட் பண்­ற­வங்­க­தான் அதி­கம் தேவைப்­ப­ட­றாங்க. புதுசா வர்­ற­வங்­க­கிட்ட ஆளு­மை­யும், தேடல்­க­ளும் பிரஷ்ஷா இருக்­க­ணும்னு எதிர்­பார்க்­கி­றேன்.

* உங்க ரிலாக்ஸ் என்ன?

முன்­னாடி அப்­பப்போ டிரைவ் போவேன். கார்ல ஸ்பீடா போகப் பிடிக்­கும். இப்போ அதுக்கு டைம் இல்ல. புரொ­டக்­க்ஷன், கான்­சர்ட், ஸ்கிரிப்ட் ஒர்க்­குன்னு மும்­மு­ரமா இருக்­கேன். ஒரு வகை­யிலே இது­வும் ரிலாக்ஸ் பண்ற மாதி­ரி­தான்.

* நம்ம தமிழ் டிரண்டை அப்­டேட் செஞ்­சி­றீங்­களா?

அப்­படி செய்­ய­லேன்னா இந்த துறை­யிலே இருக்க முடி­யாதே? பொதுவா மக்­க­ளுக்கு மெலடி ரொம்ப பிடிக்­கும். இது எவர்­கி­ரீன். ஒரு நல்ல மெலடி சிறந்த பாடல் வரி­க­ளோடு வந்தா... எந்த டிரண்டா இருந்­தா­லும் அது நிக்­கும்!