நடிக்க பயமாக இருந்தது!

12 செப்டம்பர் 2017, 11:02 PM

'மக­ளிர் மட்­டும்' படத்­தில் நடித்து வரும் ஜோதிகா இது­பற்றி கூறி­ய­தா­வது:-

''ஒரு மரு­ம­கள், தன்­னு­டைய மாமி­யா­ரை­யும், அவ­ரு­டைய நண்­பர்­க­ளை­யும் எப்­படி பார்த்­துக் கொள்­கி­றார் என்­பதே ‘மக­ளிர் மட்­டும்’ படத்­தின் கதை. இந்த கதை எப்­படி ஒரு ஆணி­டம் இருந்து வந்­தது என்று எனக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது. ஊர்­வசி, சரண்யா பொன்­வண்­ணன், பானுப்­ரியா ஆகி­யோ­ரு­டன் இணைந்து நடிக்­கும்­போது, எனக்கு பய­மாக இருந்­தது.

எங்­க­ளின் முதல் நாள் படப்­பி­டிப்பு ஒரு பட­கில் வைத்து நடை­பெற்­றது. அப்­போது என்­னால் சரி­யாக வச­னம் பேசி நடிக்க முடி­ய­வில்லை. அப்­போது அவர்­கள் மூன்று பேரும்­தான் என்னை சவு­க­ரி­ய­மான நிலைக்கு கொண்டு வந்­தார்­கள்.

ஊர்­வ­சி­யி­டம் இருந்து நிறைய கற்­றுக் கொண்­டேன். படத்­தில், நான் மோட்­டார் சைக்­கிள் ஓட்டி நடிக்க வேண்­டிய ஒரு காட்சி இருந்­தது. எனக்கு 2 நாட்­கள் மோட்­டார் சைக்­கிள் ஓட்ட சூர்யா பயிற்சி அளித்­தார். அதன் பிறகு மத்­திய பிர­தேச மாநி­லத்தை சேர்ந்த ஷீபா என்ற பயிற்­சி­யா­ளர் எனக்கு பயிற்சி அளித்­தார். நான், என் மகள் தியாவை மோட்­டார் சைக்­கி­ளில் அழைத்து சென்று பள்­ளி­யில் விட்­ட­போது, அவ­ளுக்கு பெரு­மை­யாக இருந்­தது. மகன் தேவுக்கு சூர்­யா­தான் எப்­போ­தும் ‘ஹீரோ.’ இப்­போது நடித்­துக் கொண்­டி­ருக்­கும் ‘நாச்­சி­யார்’ படத்­தின் மூலம் தேவுக்கு நான், ‘ஹீரோ’­வாக தெரி­வேன் என்று நம்­பு­கி­றேன்.

நான், தற்­போது சூர்­யா­வு­டன் தின­மும் ‘ஜிம்’­முக்கு சென்று வரு­கி­றேன். என்­னோடு நடித்த சக நடி­கர்-, நடி­கை­களை விட, நான் 5 வயது இள­மை­யாக தெரி­வேன் என்று நம்­பு­கி­றேன். பெண் எழுத்­தா­ளர்­க­ளுக்கு இப்­போது யாரும் முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­தில்லை. இயக்­கு­னர் சுதா கொங்­க­ரா­வுக்கு மாத­வன் வாய்ப்பு கொடுத்­தது, நல்ல விஷ­யம். அவர் வாய்ப்பு கொடுத்­த­தால்­தான் ‘இறு­திச்­சுற்று’ என்று ஒரு நல்ல படம் வந்து வெற்றி பெற்­றது. பெண்­களை குறை­வாக மதிப்­பி­டும் காலம் மாற வேண்­டும். பெண் எழுத்­தா­ளர்­கள், யாரும் அறி­யாத கதா­நா­ய­கர்­கள்.''