வில்லனாக பிஸி!

12 செப்டம்பர் 2017, 10:53 PM

இயக்­கு­ந­ராக இருந்த எஸ்.ஜே. சூர்யா இப்­போது படங்­கள் இயக்­கு­வதை விட்­டு­விட்டு முழு­நேர நடி­க­ராகி விட்­டார். கதா­நா­ய­க­னாக நடித்து அதில் அவ­ருக்கு வெற்றி கிடைக்­கா­த­த­னால் தற்­போது வில்­லன், குணச்­சித்­திர வேடங்­க­ளில் நடிப்­ப­தில் ஆர்­வம் காட்ட ஆரம்­பித்­தி­ருக்­கி­றார். 'இறைவி' படம் தோல்­வி­ய­டைந்­தா­லும் எஸ்.ஜே. சூர்யா நடிப்­புக்­குக் கிடைத்த வர­வேற்­பிற்கு பிறகு இப்­போது பல படங்­க­ளில் பிஸி­யாக நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார். விஜய் நடித்து வரும் 'மெர்­சல்' படத்­தில் வில்­ல­னாக நடிக்­கும் எஸ்.ஜே. சூர்யா, ஏ.ஆர்.முரு­க­தாஸ் இயக்­கத்­தில் மகேஷ் பாபு நடிக்­கும் 'ஸ்பைடர்' படத்­தி­லும் பிர­தான வில்­ல­னாக நடித்­துள்­ளார். இன்­னொரு பக்­கம் 'மாயா' பட இயக்­கு­நர் அஸ்­வின் சர­வ­ணன் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் 'இர­வாக்­கா­லம்' படத்­தில் கதா­நா­ய­க­னா­க­வும் நடித்து வரு­கி­றார் எஸ்.ஜே. சூர்யா. 'ஸ்பைடர்' படத்­தில் வில்­ல­னாக நடிப்­ப­தன் மூலம் தெலுங்­கில் பிஸி நடி­க­ராகி உள்­ளார். தெலுங்­கில் உரு­வா­க­வி­ருக்­கும் 'போகன்' ரீமேக்­கில் நடிக்­க­வும் எஸ்.ஜே. சூர்­யா­வி­டம் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­கி­றது. இப்­ப­டத்­தில் 'ஜெயம்' ரவி நடித்த கதா­பாத்­தி­ரத்­தில் ரவி­தேஜா நடிக்­கி­றார். தெலுங்­கி­லும் லக்ஷ்­மணே இயக்­கும்  இந்த படத்­தில் அர்­விந்த்­சா­மி­யின் வில்­லன் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கவே தற்­போது எஸ்.ஜே. சூர்யா அழைக்­கப்­பட்­டுள்­ளா­ராம். விரை­வில் இது­கு­றித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யா­கி­றது.