கண்கலங்கிய சதா!

10 செப்டம்பர் 2017, 02:42 AM

‘ஜெயம்’ படத்­தில் அறி­மு­க­மான சதா, தென்­னிந்­திய மொழிப்­ப­டங்­கள் மட்­டு­மின்றி, இந்தி படங்­க­ளி­லும் நடித்து வரு­கி­றார். தமி­ழைப் பொறுத்தவரை கடை­சி­யாக ‘எலி’ படத்­தில் வடி­வே­லு­வுக்கு ஜோடி­யாக நடித்­தார் சதா.

அதை­ய­டுத்து, தற்­போது ‘தமி­ழன்’ படத்தை இயக்­கிய மஜீத் இயக்கி வரும் ‘டார்ச்­லைட்’ என்ற படத்­தில் நடிக்­கி­றார். 1980களில் நடக்­கும் பீரி­யட் கதை­யில் இந்த படம் உரு­வா­கி­றது. அத­னால்  அந்த கால­கட்­டத்­தில் பயன்­ப­டுத்­தப்­பட்ட லைட் மற்­றும் உடை­கள் என ஒவ்­வொரு விஷ­யத்தையும் பார்த்து பார்த்து கவ­ன­மாக பட­மாக்கி வரு­கி­றார் மஜீத்.

 கதைப்­படி இந்த படத்­தில் விலை­மா­து­வாக நடிக்­கும் சதா, எப்­படி அந்த தொழி­லுக்கு வரு­கி­றார் என்­பதை உருக்­க­மாக சொல்­லி­யி­ருக்­கி­றா­ராம் மஜீத். அந்த கதையை கேட்­ட­போது கண்­க­லங்கிய சதா, இந்த மாதி­ரி­யான கதை­க­ளுக்­கா­கத்­தான் நான் காத்­துக்­கொண்­டி­ருந்­தேன் என்று சொல்லி, அந்த விலை­மாது வேடத்­திற்­காக முழு­மை­யாக தன்னை தயார்­ப­டுத்­திக்­கொண்டு நடித்து வரு­கி­றா­ராம்.

மேலும், இந்த ‘டார்ச்­லைட்’ படத்­தில் நடிக்க முத­லில் ‘சிவாஜி’ கேர்ள் ஸ்ரேயா­வை­த் தான் அணு­கி­னார்­க­ளாம். ஆனால் அவரோ, விலை­மாது வேடம் தனது இமேஜை பாதித்து விடும் என்று  சொல்லி நடிக்க மறுத்து விட்­டா­ராம். கார­ணம், இந்த படத்­தில் பெட்­ரூம் காட்­சி­க­ளும் உள்­ள­னவாம். ஆனால் சதா­வைப் பொறுத்­த­வரை விலை­மாது வேடம் என்­றால், இந்­த ­மா­தி­ரி­யான காட்­சி­க­ளெல்­லாம் இருக்­கத்­தான் செய்­யும் என்று சாதா­ர­ண­மாக சொன்­ன­படி அந்த மாதி­ரி­யான காட்­சி­க­ளி­லும் தத்­ரூ­ப­மான நடிப்பை வெளிப்­ப­டுத்தி வரு­கி­றா­ராம்.