சிவாவை சொன்னதே ரவிதான்! – டைரக்டர் மோகன்ராஜா

05 செப்டம்பர் 2017, 10:29 PM

''‘தனி ஒரு­வன்’ மொத்த ஒர்க்­கும் முடிஞ்ச பிற­கு­தான் ரிலீஸ் தேதியை அறி­விச்­சோம். ஆனா, ‘வேலைக்­கா­ரன்’ அப்­ப­டி­யில்லே. இது வர்ற ஆயுத பூஜை ரிலீஸ். இதை சொல்­லிட்­டு­தான் ஷூட்­டிங்­குக்கு கிளம்­பி­னோம். இதோ வந்­துட்­டோம்'' என்று பேச ஆரம்­பித்­தார் டைரக்­டர் மோகன்­ராஜா.

* சிவ­கார்த்­தி­கே­ய­னு­டன் பணி­யாற்­று­வது பற்றி உங்க பிர­தர் 'ஜெயம்' ரவி என்ன சொன்­னார்?

ரவி­யோட நான் எப்ப வேணும்­னா­லும் படம் பண்ண முடி­யும். அதெல்­லாம் ஒரு விஷ­யமே இல்லே. ‘வேலைக்­கா­ரன்’ கதை அவ­னுக்கு முதல்­லயே தெரி­யும். இந்த கதைக்கு சிவா செட் ஆவா­ருன்னு சொன்­னதே ரவி­தான்!  

* ‘வேலைக்­கா­ரன்?’

சமூக அக்­க­றை­யுள்ள, யதார்த்­த­மான இயல்­பான இளை­ஞன். ‘தனி ஒரு­வன்’ நல்லா படிச்­ச­வன். வச­தி­யா­ன­வன். திருப்தி அடை­கிற அள­வுக்கு அடிப்­படை வச­தி­க­ளும், பொரு­ளா­தா­ரத்­திேல தன்­னி­றை­வும் அடைஞ்­ச­வன். ஆனா, ‘வேலைக்­கா­ரன்’ அப்­ப­டி­யில்லே. வீடு, சுற்­றம், சமூ­கம்னு மூணு விஷ­யத்­திே­ல­யும் பொறுப்­புள்­ள­வன். பத்து பேர்ல ஒருத்­தனா இந்த சமூ­கத்­திேல வாழ­றது பெரிய விஷ­யமே இல்லே. ‘நான் சுய­ம­ரி­யாதை உள்­ள­வன்’னு நெஞ்சை நிமிர்த்தி வாழ்­ற­தி­லே­தான் அர்த்­தமே இருக்கு. சூழ­லுக்கு ஏற்ப வளைஞ்சு கொடுக்­காம, தான் விரும்­பற சூழலை அமைக்க நினைக்­க­ற­வன்­தான் ‘வேலைக்­கா­ரன்’னு சொல்­ல­லாம். ஒரு யதார்த்த இளை­ஞன் சந்­திக்­கற சவால்­கள், சாத­னை­கள்­தான் படம்.

* பஹத் பாசில் வில்­லனா..?

அப்­படி சொல்ல முடி­யாது. அவ­ருக்கு பவர்­புல்­லான ரோல். கதை எழு­த­றப்­பவே அந்த கேரக்­ட­ருக்கு பஹத் பொருத்­தமா இருப்­பா­ருன்னு தோணுச்சு. தயா­ரிப்­பா­ள­ரும் அதையே நினைச்­சார். பஹத்தை சந்­திச்சு கதை சொன்­னோம். அடுத்த செக்­கண்டே ‘ஷூட்­டிங் எப்­ப’ன்னு கேட்­டார்! ‘தனி ஒரு­வன்’ அவ­ருக்கு பிடிச்ச படம். மத்­த­வங்க பண்­ணத் தயங்­கும் ஏரி­யாவை, கேரக்­டரை, தேடிப் போய் பண்­ற­திலே பஹத்  கில்­லாடி. ரொம்ப நல்லா தமிழ் பேசு­றார். அவ­ருக்கு நடி­க­வேள்  எம்.ஆர்.ராதா காமெ­டினா ரொம்ப பிடிக்­கும்.

 சிவ­கார்த்­தி­கே­யன், நயன்­தாரா, பஹத் தவிர தம்பி ராமையா, பிர­காஷ்­ராஜ் சார், மன்­சூர் அலி­கான், சினேகா, ரோகிணி, விஜய் வசந்த், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்­கர், காளி வெங்­கட், முனீஸ்­காந்த், மைம் கோபின்னு கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு உயிர் கொடுக்­கிற நட்­சத்­தி­ரங்­கள் இருக்­காங்க.

* சிவ­கார்த்­தி­கே­யன் –-  நயன்­தாரா?

சிவா­வின் உழைப்பு பிர­மிக்க வைக்­குது. சினி­மாவை பத்தி அவ­ருக்கு ஏதோ கொஞ்­சம் தெரிஞ்­சி­ருக்­கும்... புரிஞ்­சி­ருக்­கும்னு நினைச்­சேன். ஆனா, ஒரு படத்­தோட திட்­ட­மி­டல்ல இருந்து டிஸ்ட்­ரி­பி­யூ­ஷன், பிசி­னஸ் வரை எல்­லாத்­தை­யும் தெரிஞ்சு வச்­சி­ருக்­கார்.

‘அறிவு’ கதா­பாத்­தி­ர­மாவே வாழ்ந்­தி­ருக்­கார். சிவா­வுக்கு ஜோடியா இது­வரை அவ­ரோட நடிக்­கா­த­வங்­களா இருக்­க­ணும்னு நினைச்­சேன். அப்­ப­டித்­தான் புது காம்­பி­னே­ஷன் அமைஞ்­சது. ‘தனி ஒருவ'னுக்கு அப்­பு­றம் நயன்­தாரா எனக்கு நல்ல பிரண்ட் ஆயிட்­டாங்க. கதையை கேட்­கா­ம­லேயே ‘ஷூட்­டிங் எப்­போன்னு மட்­டும் சொல்­லுங்க... வந்­தி­டு­றேன்’னு சொன்­னாங்க.

* அனி­ரூத் இசை?

சிவா­வும் அனி­ரூத்­தும் நல்ல பிரண்ட்ஸ். அனி­ரூத்­கிட்ட பேசிப் பழ­கின பிற­கு­தான் அவர்­கிட்ட யார் பேசி­னா­லும் குளோ­ஸா­கி­டு­வாங்­கன்னு புரிஞ்­சது. தனக்கு முழு திருப்தி அடைஞ்­சா­தான் அந்த டியூ­னையே நமக்கு போட்­டுக் காட்­டு­வார். ‘தனி ஒரு­வ’­னுக்­குப் பிறகு ராம்ஜி ஒளிப்­ப­திவு பண்­றார். கிட்­டத்­தட்ட அவர் எனக்கு ஒரு பிர­தர் மாதிரி. ஒரு படத்தை இயக்­கும் போது அடுத்த படத்தை பத்தி நான் யோசிக்க மாட்­டேன். அதே மாதி­ரி­தான் அவ­ரும். கதை பிடிச்­சி­ருந்தா மட்­டுமே அந்த படத்­திலே ஒர்க் பண்­ணு­வார். இயக்­கு­நர்­கள் அமீர், செல்­வ­ரா­க­வன் எல்­லாம் ஏன் அவ­ரோட வேலை பார்க்க விரும்­ப­றாங்­கனு இப்போ புரி­யுது.