அஜீத்தை புகழ்ந்த ஹாலிவுட் நடிகர்!

13 ஆகஸ்ட் 2017, 01:48 AM

சிவா இயக்­கத்­தில் அஜீத் நடித்­தி­ருக்­கும் ‘விவே­கம்’ இம்­மா­தம் 24ம் தேதி வெளி­யா­க­வி­ருக்­கி­றது. இந்­நி­லை­யில், இந்த படத்­தில் அஜீத்­து­டன் இணைந்து நடித்­துள்ள பிர­பல ஹாலி­வுட் ஸ்டண்ட் கலை­ஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் ‘விவே­கம்’ படம் குறித்­தும், அஜீத்­து­டன் நடித்த அனு­ப­வம் குறித்து சொல்லுகை­யில்,

'''விவே­கம்' உல­கத்­த­ரம் வாய்ந்த பட­மாக உரு­வா­கி­யுள்­ளது. இந்த படத்­தின் மூலம் இந்­திய சினி­மா­வில் கால் பதித்­ததை பெரு­மை­யாக கரு­து­கி­றேன். இந்த படத்­தில் அஜீத்­தின் அணி­யான ஐவ­ரில் ஒரு­வ­ராக நடித்­தது மறக்க முடி­யாத அனு­ப­வம்.  இந்த படத்­தில் நான் அவ­ரு­டன் நடித்துவிட்டு வீட்­டுக்கு திரும்­பிய பிற­கு­தான் அவர் இந்­திய சினி­மா­வில் எவ்­வ­ளவு பெரிய ஸ்டார் என்­பதை தெரிந்து கொண்­டேன். படப்­பி­டிப்­பில் அவர் அவ்­வ­ளவு எளி­மை­யாக இருப்­பார். அவர் செய்த ஆக் ஷன் காட்­சி­கள் என்னை வியப்­பில் ஆழத்­தி­ன. டூப் வேண்­டாம் என்று கூறி எல்லா சண்டைக் காட்சி சாக­சங்­க­ளை­யும் தானே திறம்­பட செய்து அசத்­தி­னார். அவ்­வ­ளவு கடின உழைப்­பாளி'' என்­றார்.