கிராபிக்ஸ் அசத்தல்!

13 ஆகஸ்ட் 2017, 01:45 AM

சந்­தீப் கிஷன், லாவண்யா திரி­பாதி, டேனி­யல் பாலாஜி, ஜாக்கி ஷெராப் உள்­ளிட்ட பலர் நடித்­துள்ள 'மாய­வன்' படத்­தின் மூலம் இயக்­கு­ந­ராக அறி­மு­க­மா­கி­றார் சி.வி. குமார்.

கிரா­பிக்ஸ் பணி­கள் நீண்ட நாட்­க­ளாக நடை­பெற்று, தற்­போது தணிக்­கை­யில் 'யு/ஏ' சான்­றி­தழ் கிடைத்­தி­ருக்­கி­றது. செப்­டம்­பர் 1-ம் தேதி வெளி­யா­க­வுள்ள இப்­ப­டம் குறித்து சி.வி. குமா­ரி­டம் கேட்ட போது அவர் கூறி­யி­ருப்­ப­தா­வது :–

''இறுதி கட்ட பணி­க­ளுக்கு நீண்ட நாட்­கள் எடுத்துக் கொண்­டோம். ஏனென்­றால் படத்­தில் நிறைய கிரா­பிக்ஸ் காட்­சி­கள் இருக்­கி­ன்றன. அனைத்­துமே நாங்­கள் கற்­ப­னை­யில் உரு­வாக்­கி­யவை. நினைத்­தது சரி­யாக வர­வில்லை என்­ற­வு­டன் மீண்­டும் வேறு மாதிரி கிரா­பிக்ஸ் செய்து இணைத்­துள்­ளோம். படத்­தில் மொத்­த­மாக 1000க்கும் அதி­க­மான கிரா­பிக்ஸ் காட்­சி­கள் இருக்­கின்­றன. இதற்கே ஒரு பெரும் தொகை செல­வா­கி­யுள்­ளது.

எனது நிறு­வ­னத்­தின் தயா­ரிப்பை எப்­படி யாரும் குறை சொன்­னதில்­லையோ, அதே போல எனது இயக்­கத்­தில் வரும் படத்­தை­யும் யாரும் குறை சொல்­லக்கூடாது. அந்த நம்­பிக்­கையை 'மாய­வன்' கொடுத்­துள்­ளது.  கொலை பின்­னணி கதை என்­றில்­லா­மல், படம் முடிந்­த­வு­டன் படத்தை பற்றி சில விஷ­யங்­கள் யோசிக்க வைக்கும்'' என்­றார்.